ஒரு பயணி மாற்றுத்திறனாளி என்பதும், சிறப்புக் குழந்தையாக இருப்பதாலும் மட்டும் அடிப்படையாக வைத்து அவரை விமானத்தில் ஏற்ற விமான நிறுவனம் அனுமதிக்க முடியாது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விதிகளை திருத்தியுள்ளது.
ஒரு பயணி மாற்றுத்திறனாளி என்பதும், சிறப்புக் குழந்தையாக இருப்பதாலும் மட்டும் அடிப்படையாக வைத்து அவரை விமானத்தில் ஏற்ற விமான நிறுவனம் அனுமதிக்க முடியாது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விதிகளை திருத்தியுள்ளது.
கடந்த மே மாதம், ராஞ்சி நகரிலிருந்து ஹைதராபாத்துக்கு இன்டிகோ நிறுவன விமானம் சென்றது. இந்த விமானத்தில் சிறப்புக் குழந்தை ஒன்றை பெற்றோர் அழைத்து வந்தபோது, அந்த சிறுவனை விமானத்தில் ஏற்ற விமானத்தில் மேலாளர் மறுத்துவிட்டார். இந்த குழந்தை அச்சத்தில் இருக்கிறது, விமானத்தில் பயணித்தால் சக பயணிகளுக்கும் பாதுகாப்பிலும் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவித்தார்.
இந்தியா-வில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்: WHO கணக்கைவிட சிறப்பு: மத்திய அரசு பெருமிதம்
இந்த விவகாரம் பெரிதானதையடுத்து, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி, இன்டிகோ நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது.
இதையடுத்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விதிகளை திருத்தி விளக்கம்அளித்துள்ளது. அதில் “ எந்த விமான நிறுவனமும், ஒரு பயணி அடுத்தவர் உதவியுடன் செயல்பட முடியும்,அல்லது மாற்றுத்திறனாளியாக இருக்கிறார் என்பதற்காக மட்டும் அவரை பயணிக்க அனுமதி மறுக்க முடியாது.
அதுபோன்ற பயணி இருந்தால், அவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், விமானநிறுவனம் மருத்துவரின் உதவி பெற்று, அவரின் உடல்நிலையை ஆய்வு செய்து, விமானத்தில் பயணிக்க தகுதியாக இருக்கிறாரா என்று ஆய்வு செய்துஅனுமதிக்கலாம். மருத்துவரின் சான்றுக்குப்பின், விமானநிறுவனம் முடிவு எடுக்கலாம். விமானநிறுவனம் எடுக்கும் முடிவையும்எழுத்துபூர்வமாக பயணிக்குஅளி்க்க வேண்டும்.
விமானத்தி் மாற்றுத்திறனாளிகள் பயணித்தால் அவர்களை விமானத்தில் ஏற்றுவதற்கும், தரையிறங்கியபின் அவர்களை அனுப்பிவைக்கவும் தேவையான உதவிகளை விமானநிறுவனம் செய்ய வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ கல்வி தொடர முடியாது... மத்திய அரசு அதிர்ச்சி.
இதற்கு முன் சிவில் விமானப் போக்கவரத்து விதிகளில், மாற்றுத்திறனாளி, அடுத்தவர் துணையின்றி பயணிக்க முடியாதவராக இருந்தால், அதைக் காரணமாகக் காட்டிஅவரை விமானத்தில் ஏற்ற மறுக்கலாம். மருத்துவரின் ஒப்புதல் பெற வேண்டியதில்லை. ஆனால் தற்போது மருத்துவரின் ஆலோசனை பெற்று அவரின் முடிவின் அடிப்படையில்தான் நிர்வாகம் செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.