நாடாளுமன்றத்தில் ஏற்படும் நெருக்கடிகளின்போது சபாநாயகர் முக்கியப் பங்காற்றுவதுடன், கட்சி மாறும் பட்சத்தில் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் பெற்றவர் என்பதால் சபாநாயகர் பதவியை விடக்கூடாது பாஜக வீம்பாக இருக்கிறது.
புதிய மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து மூன்றாவது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்துள்ளது. தொடர்ந்து, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி எட்டு நாட்கள் நடக்கவுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 93வது பிரிவின்படி, புதிய மக்களவை அதன் முதல் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு சற்று முன் சபாநாயகர் பதவி காலியாகிவிடும். இதையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக, குடியரசுத் தலைவர் ஒரு இடைக்கால சபாநாயகரை நியமிப்பார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், 7 முறை பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யுமான ராதா மோகன் சிங், சீனியாரிட்டி காரணமாக இந்த பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்ப இரண்டு நாட்களில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதையடுத்து ஜூன் 26ஆம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.
அமித் ஷா கண்டித்தாரா? வைரல் வீடியோ சர்ச்சைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்
17வது மக்களவையின் சபாநாயகராக பணியாற்றிய ஓம் பிர்லா இந்த பதவிக்கு முக்கிய வேட்பாளராக உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) மற்றும் ஜனதா தளம் (யுனைடெட்) ஆகியவை சபாநாயகர் பதவி தங்கள் கட்சியைச் சேர்ந்தவருக்குக் கிடைக்க வேண்டும் என விரும்புகின்றன. பாஜக தங்கள் எம்.பி.க்களுடன் குதிரை பேரம் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதால், சபாநாயகர் பதவி தங்கள் வசம் இருக்க வேண்டும் என எச்சரிக்கையாக உள்ளன. ஜி.எம். ஹரிஷ் பாலயோகி போன்ற சில தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் சபாநாயகர் பதவிக்கு வாய்ப்புள்ளவர்கள் என்று கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
பாஜகவுக்கு சபாநாயகர் பதவியைப் பெறுவது மிகவும் முக்கியமானதாக உள்ளது. 240 எம்.பி.க்களுடன் பலவீனமாக இருக்கும் பாஜக, பெரும்பான்மையைப் பெற என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகள் ஆதரவைப் பெற்றுள்ளது. அதன் மூலம் கூட்டணியாக மொத்தம் 293 இடங்கள் ஆளும் கூட்டணியின் வசம் உள்ளது. நாடாளுமன்றத்தில் ஏற்படும் நெருக்கடிகளின்போது சபாநாயகர் முக்கியப் பங்காற்றுவதுடன், கட்சி மாறும் பட்சத்தில் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் பெற்றவர் என்பதால் சபாநாயகர் பதவியை விடக்கூடாது பாஜக வீம்பாக இருக்கிறது.
சமீபத்தில், ஆந்திரப் பிரதேச பாஜக தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான டகுபதி புரந்தேஸ்வரியும் சபாநாயகராக சாத்தியம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்.டி.ராமராவின் மகளான புரந்தேஸ்வரி, ராஜமுந்திரியில் இருந்து பாஜக எம்பியாக வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் எம்பியாகவும் பணியாற்றினார்.
ஜூன் 26ஆம் தேதி புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதைத் தொடர்ந்து, ஜூன் 27ஆம் தேதி நாடாறுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார். ஜூலை 3ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். ஜூலை 22ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பத்தூரில் அரிய வகை பாம்பை கொன்று சமைத்துத் தின்ற இளைஞர் கைது!