நள்ளிரவில் டெல்லி, நேபாளத்தில் நிலநடுக்கம்.. தூக்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலையில் தஞ்சம்.!

By vinoth kumarFirst Published Nov 9, 2022, 6:40 AM IST
Highlights

நேபாளத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில், 4.9 என பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் நேபாள நாட்டில் இரண்டாவதுது முறையாக மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

நள்ளிரவில் தலைவர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். 

நேபாளத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில், 4.9 என பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் நேபாள நாட்டில் இரண்டாவதுது முறையாக மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியிருந்தது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க;- தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஜூன்ஸ், டி-சர்ட், லெகின்ஸ் அணிய தடை..!

இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் டெல்லி, நொய்டா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 விநாடிக்கு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இததனால், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தால் சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;-  முடி கொட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்த இளைஞர்.. மருத்துவர் தான் காரணம் - அதிர்ச்சி தகவல்!

click me!