கடந்த 10 நாட்களில் இந்தியாவுக்கு வந்த சர்வதேச பயணிகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 11 வகையான ஒமைக்ரான் திரிபு வைரஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களில் இந்தியாவுக்கு வந்த சர்வதேச பயணிகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 11 வகையான ஒமைக்ரான் திரிபு வைரஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த 11 வகையான வைரஸ்களும் இந்தியாவில் இதற்கு முன் இருந்தவை என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
டிஜிட்டல் இந்தியா உலகுக்கே ஒளி பாய்ச்சும் திட்டம்: சத்யா நாதெள்ளா கருத்து
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வந்துவிடும் என்று மத்திய அரசு கருதியது. இதையடுத்து, சீனா உள்ளிட்ட 5 நாடுகளி்ல் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பயணிகள் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் 2023, ஜனவரி 3ம் தேதிவரை இந்தியா வந்த வெளிநாட்டுப் பயணிகளில் 19,277 பேரில் 124 பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இதில், இவர்கள் உடலில் 11 வகையான ஒமைக்ரான் உருமாற்ற வைரஸ்கள் இருப்பது பரிசோதனையின் ஆய்வில் கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில் 40 பேருக்கு எக்ஸ்பிபி, 14 பேர் உடலில் எக்ஸ்பிபி.1 வைரஸ், பிஎப்7.4.1 வைரஸ் ஒருவர் உடலிலும் இருந்தது கண்டறியப்பட்டது.
ஆனால், இந்த வகை வைரஸ்கள் ஏற்கெனவே இந்தியாவில் இருந்து மறைந்தவை என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
மத்திய அமைச்சர் அமித் ஷா பயணித்த விமானம் அவசரமாக கவுகாத்தியில் தரையிறக்கம்: என்ன காரணம்?
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, இன்று புதிதாக 188 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,554 ஆகக் குறைந்துவிட்டது. இதுவரை தடுப்பூசி 220.12 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.