
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தில் 11705 ஜூனியர் டெலிகாம் ஆபிசர்ஸ் (JTO) பதவிக்கு ஆள் எடுக்க படுவதாக, கடந்த புதன் கிழமை அன்று, சில செய்திகள் வெளியானதை தொடர்ந்து, இது முற்றிலும்உண்மைக்கு புறம்பானது என்றும், தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்த தகவல்களை நம்ப வேண்டும் என்றும்... BSNL நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே நேரம் அதிகார பூர்வமின்றி வெளியாகும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த புதன் கிழமை அன்று BSNL வேலைவாய்ப்பு குறித்து வெளியான போலி தகவலில், "BSNL நிறுவனத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி ஜூனியர் டெலிகாம் ஆபிசர்ஸ் வேலை செய்ய தகுதியுள்ள நபர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 16400 - 40500 முதல் சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
விஜய் டிவி சீரியல் அம்மா நடிகைக்கு 45 வயதில் மறுமணமா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!
இதை நம்பி பலர் விண்ணப்பிக்க தயார் ஆன நிலையில் தான்... BSNL நிறுவனம் இந்த தகவல் முற்றிலும் போலியானது என்றும், BSNL தற்போது எவ்வித ஆள் சேர்ப்பு பணியையும் மேற்கொள்ள வில்லை என தெரிவித்துள்ளது. வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள்... தொடர்ந்து தங்களின் சமூக வலைதளபக்கமான
bsnl.co.in மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். இதில் வெளியாகும் தகவல்கள் மட்டுமே உண்மையானது என கூறி பரவி வந்தது வதந்தி என்பதை உறுதி செய்துள்ளது.