Rahul Gandhi: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு ராமர் கோயில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் ஆதரவு

By Pothy RajFirst Published Jan 5, 2023, 3:14 PM IST
Highlights

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளரும், விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் தலைவருமான சம்பத் ராய் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளரும், விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் தலைவருமான சம்பத் ராய் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்தியேந்திர தாஸ், பாரத் ஜோடோ யாத்திரைக்கு ஆதரவு அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் நடைபயணம் தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி சென்று தற்போது உத்தரப்பிரதேசத்துக்குள் ராகுல் காந்தி நடந்து வருகிறது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளரும், விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் தலைவருமான சம்பத் ராய்யிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர்  பதில் அளிக்கையில் “ 50வயதான இளைஞன் இந்த கொடும் குளிரில் இந்தியாவைத் தெரிந்துகொள்ள நடந்து வருகிறார். அவரின் முயற்சிகளை பாராட்டாமல், ஊக்கப்படுத்தாமல் வேறு செய்ய முடியும். 

Haldwani: உத்தரகாண்ட் ஹல்த்வானி 50ஆயிரம் மக்கள் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினராக நான் இருக்கிறேன், ஆனால், ஒருபோதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அந்த யாத்திரையை குறை கூறியது இல்லை. இதுவரை ஆர்எஸ்எஸ் அமைப்பில் யாரேனும் ராகுல் காந்தி யாத்திரையை குறைகூறியிருக்கிறார்களா.

பிரதமர் மோடி இந்த யாத்திரையை விமர்சித்துள்ளாரா, ராகுல் காந்தி எனும் இளைஞன் இந்தியாவில் 3ஆயிரம் கி.மீ தொலவைக் கடந்துள்ளார். யார் வேண்டுமானாலும் இவர் வளர்ச்சியைப் பாராட்டலாம்” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா தாஸ் கடந்த மாதம் 31ம் தேதி ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி யாத்திரையை புகழ்ந்திருந்தார். 

Rahul:என் டிஷார்ட்டை கவனிக்கும் நீங்கள், கந்தலாடை அணிந்தவர்களை ஏன் மறந்தீர்கள்! ஊடகங்களை விளாசிய ராகுல் காந்தி

அதுகுறித்து ஆச்சார்யா தாஸ் நிருபர்களிடம் கூறுகையில் “ யாத்திரையில் பங்கேற்கக்கூறி காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. நான் மதகுருவாக இருப்பதால் எந்த கட்சிக்கும் சார்பாக நடந்துகொள்ளக்கூடாது எனத் தெரிவித்தேன்.

ராகுல் காந்திக்காக குறைந்தபட்சம் கடிதம் எழுதக் கேட்டார்கள், அதனால் கடிதம் எழுதினேன். யாரையும், எவரையும் பாராட்டுவதில், ஊக்கப்படுத்துவதில் எந்தவிதமான தீங்கும் வந்துவிடடாது.” எனத் தெரிவித்தார்


 

click me!