துபாய் பட்டத்து இளவரசர் இன்று இந்தியா வருகை! பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை!

துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் இன்று இந்தியா வருகை தருகிறார். பிரதமர் மோடி அவருக்கு மதிய விருந்து அளித்து உபசரிக்க உள்ளார். 


Dubai Crown Prince  visiting India today: துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் இன்று (ஏப்ரல் 8) இந்தியா வருகை தருகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும்  ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் ஏப்ரல் 8 (இன்று) மற்றும் ஏப்ரல் 9 (நாளை) என 2 நாள் இந்தியாவில் இருப்பார். மக்தூம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

இந்தியா வரும் துபாய் பட்டத்து இளவசரர்

Latest Videos

இன்று இந்தியா வரும் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது இருவரும் இருநாட்டு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி  ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூக்கு மதிய விருந்து அளிக்கிறார்.

தொழிலதிபர்கள் கூட்டத்திலும் பங்கேற்பு

பிரதமர் மோடி மட்டுமின்றி வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்தித்து ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். 
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நாளை மும்பையில் நடைபெறும்  இந்தியா - ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர்கள் கூட்டத்திலும் துபாயின் பட்டத்து இளவரசர் பங்கேற்கிறார். 

இந்த ரயிலில் பயணித்தால் 3 வேளையும் சுடச்சுட உணவு இலவசம்! ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம்!

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை 

"துபாய் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் ஏப்ரல் 8-9 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருவார்" என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பன்முக உறவுகளை வலுப்படுத்தும்

துபாய் பட்டத்து இளவரசராக ஆன பிறகு  ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூனின் முதல் இந்திய பயணம் இது என்றும் பிரதமர் மோடி அவருக்கு மதிய உணவை வழங்குவார் எனவும் வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ''பட்டத்து இளவரசரின் வருகை இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விரிவான மூலோபாய கூட்டாண்மையை (CSP) மேலும் உறுதிப்படுத்தும் மற்றும் துபாய் உடனான நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தும்" என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக ஒத்துழைப்பை வலுப்படுத்தும்

தனது பயணத்தின் போது பட்டத்து இளவரசர்  ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் மும்பையில் இரு தரப்பிலிருந்தும் முக்கிய வணிகத் தலைவர்களுடன் ஒரு வணிக வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பார். "இந்த தொடர்பு பாரம்பரிய மற்றும் எதிர்காலப் பகுதிகளில் இந்தியா-யுஏஇ பொருளாதார மற்றும் வணிக ஒத்துழைப்பை வலுப்படுத்தும்" என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துபாயில் வசிக்கும் இந்தியர்கள் 

பாரம்பரியமாக, துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இந்தியாவின் வணிக, கலாச்சார மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்களில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சுமார் 4.3 மில்லியன் இந்திய புலம்பெயர்ந்தோரில் பெரும்பாலோர் துபாயில் வசித்து வேலை செய்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LPG Cylinder Price Hike: கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

click me!