சர்வதேச யோகா தினத்துக்கு மத்திய அரசின் செலவு எவ்வளவு தெரியுமா?

 
Published : Jul 05, 2017, 10:38 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
சர்வதேச யோகா தினத்துக்கு மத்திய அரசின் செலவு எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

Do you know the cost for International Yoga Day by central government?

கடந்த 2 ஆண்டுகளில் சர்வதேச யோகா தினத்துக்காக ரூ. 34.5 கோடியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் செலவு செய்ததாக ஆர்.டி.ஐ. மனுமூலம் தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ம் தேதியை சர்வதேசயோகா தினமாக உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன.

கடந்த மாதம 21-ந்தேதி லக்னோவில் நடந்த சர்வதேசயோகா தினவிழாவில் பிரதமர் மோடியுடன் 50 ஆயிரம் பேர் பங்கேற்று யோகா செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்தனர்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் சர்வதேச யோகாதினத்துக்கு மத்திய அரசு செலவிட்ட தொகை எவ்வளவு? என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒருவர் விளக்கம் கேட்டு இருந்தார்.

இதற்கு மத்திய பொது தகவல் அலுவலர் பானாமலி நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில், “ கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 34.50 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது. இதில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற யோகா முகாமுக்கு 16.40 கோடி ரூபாயும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற முகாமுக்கு 18.10 கோடி ரூபாயும்  ஆயுஷ் அமைச்சகம் செலவிட்டுள்ளது. அதேசமயம், 
இந்த ஆண்டுக்கான கணக்கு விபரம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!