
அமெரிக்கா பயணத்தின் போது, அந்நாட்டு அதிபர்டொனால்ட் டிரம்பிடம், இந்தியர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் எச்.1பி. விசா பிரச்சினையை எழுப்பவில்லை, இந்தியாவின் நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீர் என்று கூறியதற்கும் கண்டிக்கவில்லை, மொத்தத்தில் மோடி ஒரு பலவீனமான பிரதமர், அமெரிக்காவுக்கு போட்டோ ஷூட் நடத்தவா சென்றார்? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி கடந்த மாதம் இறுதியில் 3 நாட்கள் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டார்.
அதேசமயம், இந்தியாவின் ஒருபகுதியான காஷ்மீரை பற்றி அமெரிக்கா குறிப்பிடும் போது, இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்று குறிப்பிட்டது. இதற்கு மத்தியவௌியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த விதமான கண்டனமும் வரவில்லை. அதை ஏற்றுக்கொண்டதுபோல் அமைதியாக இருந்துவிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று இது குறித்து கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், “ பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் என்பது, சிறந்த போட்டோக்களை எடுப்பதற்கான வாய்ப்பாக அமைந்துவிட்டது.
எச்.1பி.விசா உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை அதிபர் டிரம்புடன் பேச மோடி மறந்துவிட்டார்.
இந்த பயணத்தால் இந்தியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அமெரிக்காவுக்கு செல்வதில் எச்.1பி. விசா முறை சிக்கலாக மாறி இருக்கும்போது, இதை தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். அதிபர் டிரம்புடன் விசா பிரச்சினையை பேசி இருக்க வேண்டும்.
அதேபோல, இந்தியாவின் நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீர் என்று அமெரிக்கா குறிப்பிட்டதையும் மத்தியவௌியுறவுத் துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுவிட்டது.
ஓட்டுமொத்தத்தில் இந்தியாவின் பிரதமர் மோடி பலவீனம் உள்ளவரா இருக்கிறார்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ேமலும், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர்அஜய் மகான் கூறுகையில், “ மோடி கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட 64 வௌிநாட்டு பயணங்கள், நாட்டுக்கு எந்த விதத்திலும் நன்மை அளிக்கவில்லை ’’ என்று தெரிவித்துள்ளார்.