
4ஜி நெட்வொர்க் உலகில் ஒரு ஜிபி, 2 ஜிபி டேட்டாக்களை தங்கம் மாதிரி ரூ.500க்கும், ரூ.300க்கும் விற்று கொண்டிருந்த செல்போன் கம்பெனிகளை நடு தெருவுக்கு கொண்டு வந்து, வாடிக்கையாளர்களை அம்பானியை சேரும்.
4ஜி நெட்வொர்க்கை இலவசமாக்கி சாதாரண ஏழை, எளியவர்களும், வலை தளங்களை பயன்படுத்தவும், வியாபாரத்தை விருத்தி செய்யவும், கல்வி அறிவு பெறவும், பல்வேறு தகவல்களை பெறவும், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள் செல்போன் பயன்பாட்டின் மூலம் சினிமா, பொழுதுபோக்கு, யூ டியூப், போன்றவைகளை இலவசமாக பயன்படுத்த அம்பானியின் ஜியோ 4 ஜி பெரிதும் உபயோகப்பட்டது.
4ஜி செல்போன்களை குறைந்த விலையில், அதுவும் வெரும் 500 ரூபாய் விலைக்கு தருவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இன்னும் 15 நாட்களில், வரும் ஜூலை21ம் தேதி இந்த செல்போன்கள் விற்பனைக்கு வரவுள்ளது.
ஏற்கனவே, ஜியோ சிம்கார்டை 11 கோடிக்கு மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, ஜியோ ஸ்மார்ட் போன்கள் ரூ.3000 முதல் கிடைக்கிறது. ஆனால், ரூ.500க்கு செல்போன் என்பது ஆன்ட்ராய்டு உலகத்தை அசைத்து பார்க்கும் முகேஷ் அம்பானி ஏற்கனவே ஜியோவில் முதலீடு செய்துள்ளார். இன்டர்நெட் உலகில் ஒரு சகாப்தத்தை உருவாக்கியுள்ளார்.
இன்டர்நெட் உலகில் சீனாவில் 700 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஏற்கனவே செல்போன் என்பது ஏழை மக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தபோது, 500 ரூபாய்க்கு 2 செல்போன்களை கொடுத்து அம்பானி சகோதரர்கள் புரட்சி செய்தனர்.
தற்போது ஆன்ராய்டு போன்களை 500 (சிடிஎம்ஏ) ரூபாய்க்கு கொடுத்தது, செல்போன் சேவையை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்கிறது.