முகமது ஜுபைருக்கு ஜாமீன் மறுப்பு.. டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு !

Published : Jul 02, 2022, 09:55 PM IST
முகமது ஜுபைருக்கு ஜாமீன் மறுப்பு.. டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு !

சுருக்கம்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் 2018ஆம் ஆண்டு போட்ட ட்விட்டர் பதிவிற்காக கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் அல்ட் நியூஸ் எனப்படும் இணையதள செய்தி நிறுவனத்தில் இணை நிறுவனராக பதவி வகிப்பவர் முகமது ஜுபைர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வலதுசாரி அமைப்புகளால் பரப்பபட்ட செய்தியை போலியானது என உறுதி செய்தார்.அதனை ட்விட்டரிலும் பதிவிட்டார்.  

மேலும் செய்திகளுக்கு.. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!

இந்த பதிவானது வன்முறையை தூண்டும் விதமாகவும், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாக கூறி கடந்த திங்கள்கிழமை அவரை அகமதாபாத் போலீஸார் கைது செய்தனர். ஆனால் மேற்குறிப்பிட்ட வழக்கிற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து ஏற்கனவே ஜாமீன் பெற்றிருந்தார். 

எனவே ஜாமீன் பெற்ற வழக்கில் எப்படி கைது செய்ய முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விளக்கம் அளித்த டெல்லி போலீஸ், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் 2018ஆம் ஆண்டு போட்ட ட்விட்டர் பதிவிற்காக கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு.. சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான ரூ.234 கோடி முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி !

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், அல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரின் ஜாமீன் மனுவை நிராகரித்து, 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுமதி அளித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ் செய்த தவறு இதுதான்..உண்மையை போட்டு உடைத்த எடப்பாடியார் - என்ன சொன்னார் தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்
இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்