
மணிப்பூர் மாநிலம், நோனி மாவட்டத்தில் துப்புல் யார்டு ரெயில்வே நிலையம் அருகே ரெயில்வே கட்டுமான பணிக்காக, அப்பகுதியில் ராணுவத்தினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தொடர் மழை காரணமாக, துபுல் ரெயில் நிலைய கட்டிடம் சேதமடைந்தது. மேலும், கடந்த இதனை தொடர்ந்து, ராணுவ முகாமுக்கு அருகே கடந்த 29ம் தேதி இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் மாட்டிக்கொண்டனர். அவர்களை மீட்பதிலும் சிக்கல் நீடித்தது.
தொடந்து மீட்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதில் ராணுவ வீரர்கள் 13 பேர் மற்றும் பொதுமக்களில் 5 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 18 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 6 பேர் என மொத்தம் 24 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன ராணுவ வீரர்கள் 12 பேர் மற்றும் பொதுமக்களில் 26 பேரை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது.
5000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் திடீர் புகை... மூச்சு முட்டியதால் அலறிய பயணிகள்..!
மீண்டும் ஒரு நிலச்சரிவு
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே மீண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக மணிப்பூரின் மலையேற்றம் மற்றும் கண்காணிப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் பைரோன் சிங், நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும், மேலும், 55 பேர் இன்னும் சிக்கி உள்ளனர் என்றார். மண்ணின் தன்மையால் உயிரிழந்த அனைவரின் உடல்களையும் மீட்பதற்கு 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும் எனவும் பைரன் சில் தெரிவித்தார்.
Supreme Court: விளம்பரத்திற்காக பேசினாரா நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்