டெல்லியில் உள்ள மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததால், அங்கு அனுமதிக்கப்பட்ட 40 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக யமனை ஆற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. வியாழன் அன்று யமுனை நதியின் நீர்மட்டம் 208.57 மீட்டரைத் தொட்டது யமுனை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் டெல்லி நகரே தண்ணீரில் தத்தளிக்கிறது. இதனால் டெல்லியில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
டெல்லியின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல பகுதிகளில், மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்கின்றனர்.
சந்திரயான் 3 கவுன்டவுன் தொடங்கியது! ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்!
இதனிடையே அத்தியாவசிய தேவையில்லாமல் வீ மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுறுத்தி உள்ளார். மேலும் “வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூடிவிட்டோம். நிவாரண முகாம்களில் அனைத்து வசதிகளையும் வழங்க முயற்சிக்கிறோம்... இன்று மாலை 3-4 மணிக்கு உச்சம் (யமுனை நதியின் நீர்மட்டம்) அடையும், பின்னர் அது குறையத் தொடங்கும்.” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லி மெட்கால்ஃப் சாலையில் உள்ள சுஷ்ருதா மருத்துவனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இங்கு அனுமதிக்கப்பட்ட 40 நோயாளிகள், வென்டிலேட்டர்களில் மூன்று பேர் உட்பட, எல்என்ஜேபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பயணத்தில் பிரதமர் மோடியுடன் அவ்வப்போது தோன்றும் இந்தப் பெண்மணி யார்?