
டெல்லி முதலமைச்சரும், கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடத்திய பிறகு, வியாழக்கிழமை காலை அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி (AAP) தெரிவித்துள்ளது. டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய மூன்றாவது சம்மனை கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டதை அடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களவை தேர்தல் 2024: முதல் ஆளாய் வேட்பாளரை அறிவித்த நிதிஷ்குமார்; கூட்டணிக்குள் புகைச்சல்!
டெல்லி சட்டத்துறை அமைச்சர் அதிஷி நேற்றிரவு தனது X வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். அவரின் பதிவில் "நாளை காலை @அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப் போகிறது என்று செய்திகள் வருகின்றன. கைது செய்ய வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிஷியின் இந்த ட்வீட்டை தொடர்ந்து டெல்லி சுகாதார அமைச்சர் சௌரப் பரத்வாஜும் X வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். கெஜ்ரிவாலை ED கைது செய்தது பற்றிய ஊகங்கள் இருப்பதாகக் தெரிவித்தார்..அவரின் பதிவில் “ அமலாக்கத்துறை நாளை காலை முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்யப் போகிறது என்று நாங்கள் கேள்விப்பட்டோம்" என்று குறிப்பிட்டார்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி அமலாக்கத்துறை, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியது. இதுதொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறைக்கு அளித்த பதிலில் தெரிவித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சம்மன் அனுப்பப்பட்ட தேதியில் ஆஜராக மறுத்துவிட்டார், மேலும் அந்த நோட்டீஸை "சட்டவிரோதம்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தன்னைத் தடுக்கவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மத உணர்வை காயப்படுத்துகிறார்கள்: இந்தியா கூட்டணி குறித்து பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அமலாக்கத்துறை நவம்பர் 2 ஆம் தேதி ஆஜராகுமாறு டெல்லி முதல்வருக்கு முதலில் சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த நோட்டீஸ் தெளிவற்றது ன்று குற்றம் சாட்டினார். மேலும், சம்மன்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் விமர்சித்தார். இதற்கிடையில், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது ஏன் என்று ஆம் ஆத்மி கேள்வி எழுப்பி உள்ளது.