மத உணர்வை காயப்படுத்துகிறார்கள்: இந்தியா கூட்டணி குறித்து பிரதமர் மோடி குற்றச்சாட்டு

By SG BalanFirst Published Jan 3, 2024, 11:18 PM IST
Highlights

இதுவரை கேரளாவை ஆட்சி செய்த கட்சிகள் குடும்ப அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; மக்களை கண்டுகொள்ளவில்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மத உணர்வுகளைத் தொடர்ந்து காயப்படுத்தி வருகிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுளாளர்.

கேரளாவில் திருச்சூரில் நடைபெற்ற பாஜகவின் மாநில பெண்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி, "கேரளாவில் மாறி மாறி ஆட்சி செய்துவரும் காங்கிரஸ், இடது முன்னணி கட்சிகள் மாநிலத்தில் வஞ்சனையை விதைக்கின்றன. பெண்களின் சக்தியை அவர்கள் புறக்கணிக்கின்றனர்" என்று சாடினார்.

Latest Videos

இதுவரை கேரளாவை ஆட்சி செய்த கட்சிகள் குடும்ப அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; மக்களை கண்டுகொள்ளவில்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

1992 முதல் 2024 வரை அயோத்தி ராமர் கோயிலுக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு!

"கேரளாவில் நல்ல ஆட்சி வேண்டுமென்றால், அதை பா.ஜ.க. மட்டுமே தர முடியும். பெண்களின் நலனுக்கான மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பா.ஜ.க. அரசால் மட்டுமே நிறைவேற்ற முடியும்" என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகளை நம் பார்த்து வருகிறோம். இதை எல்லாம் சரிசெய்ய முடியாத கையாலாகாத அரசு தான் கேரளாவில் நடந்துவருகிறது" என்று விமர்சித்த பிரதமர், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மத உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறது என்றும் கோவில்களை வருமானம் தரும் இடங்களாக மட்டுமே பார்க்கிறது என்றும் குறை கூறியிருக்கிறார்.

அண்மையில் நடந்து முடிந்த ஜி20 மாநாட்டின் மூலம் லட்சத்தீவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் சர்வதேச சுற்றுலா வரைப்படத்தில் லட்சத்தீவை இடம்பெறச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.

முதல் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விண்கலம்!

click me!