அயோத்தியில் மீரா மாஞ்சி வீட்டுக்குச் சென்று தேநீர் அருந்திய பிரதமர் மோடி, அவரது குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்களை அனுப்பியுள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. அயோத்தியில் உட்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் உத்தரப் பிரதேசம் முழுவதும் சுமார் ரூ.4600 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார்.
அயோத்தியில் ரூ.240 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம், ரூ.1,450 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலையமும் இதில் அடங்கும். இந்த திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அயோத்தி சென்ற பிரதமர் மோடி, அயோத்தியில் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வரும் மீரா மாஞ்சி எனும் பெண்ணின் வீட்டுக்கு சென்று தேநீர் அருந்தினார்.
அயோத்தியில் மீரா மாஞ்சி வீட்டுக்குச் சென்று தேநீர் அருந்திய பிரதமர் மோடி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேலும் அவரது குடும்பத்தினருக்கு பரிசுகளையும் அனுப்பியுள்ளார். pic.twitter.com/pSRGlwnqrL
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
மேலும், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள மீரா மாஞ்சிக்கு சிறப்பு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. சாதாரண பெண் ஒருவரின் வீட்டுக்கு பிரதமர் சென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அப்பெண் யார் என்ற கேள்வியும் எழுந்தது. தொடர்ந்து, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளிதான் மீரா மாஞ்சி என்பதும் தெரியவந்தது.
செந்தில் பாலாஜி வழக்கில் 900 பேர் குற்றவாளிகள்: மத்திய குற்றப் பிரிவு போலீஸ்!
இந்த நிலையில், மீரா மாஞ்சிக்கு கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, அவரது குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்களையும் அனுப்பியுள்ளார். அதில், தேநீர்-செட், ஓவிய புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை மீரா மாஞ்சியின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி அனுப்பியுள்ளார்.