
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்திற்கு பிறகு தனது பழைய காதலனுடன் ஓடிய பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தலை மறைவாகிய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் பன்வார் சிங் ரானாலி. இவரது மகள் சாய்னா கன்வார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் அவரது வீட்டில் நாக்பூர் மாவட்டம் திட்வானா பகுதியைச் சேர்ந்த தேவேந்திர சிங் என்பவரை சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது பழைய காதலனை பார்த்த சாய்னா அவருடன் ஓடிவிட்டார். இதனால் பன்வார் வீட்டில் அனைவரும் கோபத்துடன் இருந்துள்ளனர்.
இதையடுத்து பல நாட்களாக தலைமறைவாக இருந்த சாய்னாவை அவரது தந்தை பஸ்டாண்டில் வைத்து பார்த்துள்ளார்.
அவரை தனது பழைய வீட்டிற்கு அழைத்து சென்று கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு பன்வார் அங்கிருந்து தப்பி சென்றார். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பன்வாரை தேடி வருகின்றனர்.