
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம், வருமானவரி புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரிகள் மூலம் முறைகேடாக வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்
புதுக்கோட்டை மாவடடம், வேங்கைவாசல் மற்றும் இலுப்பூரில், அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்துக்குச் சொந்தமான கல்குவாரிகள் உள்ளன. இந்த கல் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய பொதுப்பணித்துறையினர் ஆய்வு நடத்தினர். ஆய்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்படடுள்ளது.
விதிகளை மீறி கல்குவாரிகள் மூலம் அதிக அளவில் வருமானம் ஈட்டியது குறித்து விசாரணை நடத்த, வருமான வரித்துறைக்கும் மத்திய பொதுப்பணித்துறை பரிந்துரை செய்தது.
இதன் அடிப்படையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, சின்னத்தம்பி,சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சின்னத்தம்பி விளக்கமளித்து வருகிறார்.