
டுவிட்டரில் பிரதமர் மோடியை கிண்டல் செய்து டுவிட் செய்த, ‘அனைத்து இந்தியபக்சோட்’ அமைப்பினர் மீது மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில், ஒரு ரெயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் நபரின் புகைப்படம் வௌியானது. அந்த புகைப்படத்தைடுவிட்டரில் வௌியிட்ட அனைத்து இந்திய பக்சோட் அமைப்பினர், பிரதமரின் உண்மையான புகைப்படத்தையும் வௌியிட்டு ஒப்பிட்டனர்.
அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடியின் உண்மையான புகைப்படத்தில், நாயின் காதுகளையும், மூக்கையும் பொறுத்தி கிண்டல் செய்து டுவிட்டரில் வௌியிட்டனர். இந்த புகைப்படம் டுவிட்டரில் வைரலாகப் பரவி கிண்டலுக்கு ஆளானது.
ஆனால், பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனைத்து இந்திய பக்சோட்அமைப்பினர் கிண்டல் செய்தது, மோடியின் ஆதரவாளர்களுக்கு வேதனையை அளித்தது. இதையடுத்து, டுவிட்டரில் சிலர் கண்டனம் தெரிவித்ததால், அடுத்த சில மணி நேரங்களில் அந்த புகைப்படம் நீக்கப்பட்டது.
இருந்தபோதிலும், மோடியின் ஆதரவாளர்கள் இது குறித்து மும்பை பாந்த்ரா-குர்லாபோலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மும்பை போலீசார் ‘அனைத்து இந்திய பக்சோட்’ அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை போலீஸ் இணை ஆணையர் சஞ்சய் சக்சேனா தெரிவித்துள்ளார்.