
நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் 2 நாட்கள் போலீஸ் காவலில் இருந்த நடிகர் திலீப்புக்கு மேலும் ஒருநாள் போலீஸ் காவலை நீட்டித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதத்துக்கு முன் நடிகை பாவனா, படப்பிடிப்பை முடித்து கொண்டு காரில் சென்றபோது, கேரளாவில் மர்மநபர்கள் சிலரால் பாலில் துன்புறுத்தலுக்கு ஆளானார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்சர் சுனில் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் நடிகர் தீலிப் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், திலீப்பை ரகசியமாக கண்காணித்து விசாரித்தனர். அதில் அவருக்கு, தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு திலீப் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நடிகர் திலீப்பை அங்கமாலி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, திலீப் தரப்பு வழக்கறிஞர், ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
அதே நேரத்தில் போலீசாரும், திலீப்பை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர். இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி, நடிகர் திலீப்பிடம் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
திலீப்புக்கு, 2 நாட்கள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நடிகர் திலீப் இன்று அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நடிகர் திலீப்புக்கு மேலும் ஒரு நாள் போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணி வரை போலீஸ் காவலில் விசாரிக்கவும் அங்கமாலி நீதிமன்றம் உத்தரவிட்டது.