அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக்கடலில் உருவாகும் 'Biparjoy' புயல்; இந்த பெயரை வைத்தது எந்த நாடு தெரியுமா?

By Ramya sFirst Published Jun 6, 2023, 5:16 PM IST
Highlights

அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்றிரவு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது கோவாவுக்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 920 கி.மீ. தொலைவிலும், மும்பைக்கு தென்-தென்மேற்கே 1120 கி.மீ. தொலைவிலும், போர்பந்தருக்கு தெற்கே 1160 கி.மீ தொலைவிலும் கராச்சிக்கு தெற்கே, 1520 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் புயலாக வலுப்பெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு வங்காளதேசம் வழங்கிய சைக்ளோன் பைபர்ஜாய் ( Biparjoy) என்று பெயரிடப்படும். இந்த பெங்காலி வார்த்தைக்கு ஆங்கிலத்தில் 'பேரழிவு' என்று பொருள்.

தலையில் இருந்த இரும்பு நட்டை அகற்றாமலே தையல் போட்ட செவிலியர்கள்.. பின்னர் நடந்தது என்ன?

இந்த புயல் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து நகர்வதால் அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் மிகக் கடுமையான புயலாக தீவிரமடையக்கூடும். அதற்குள் இது மும்பையின் தென்மேற்கே 876 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கும்.

இந்த புயல் காரணமாக ஜூன் 6 முதல் 10 வரை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், கேரளா-கர்நாடகா-கோவா கடற்கரைகள், அரபிக்கடலின் மத்திய பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், அந்தமான் கடல், தெற்கு மற்றும் கிழக்கு மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் சீற்றத்துடன் கூடிய வானிலை நிலவும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

இதனிடையே அடுத்த 5 நாட்களுக்கு கேரளா, லட்சத்தீவு மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் பலத்த காற்று வீசக்கூடும்.

தனது வருமானத்தை குறைத்து காட்டியதை ஒப்புகொண்ட பிபிசி இந்தியா.. எதிர்க்கட்சிகள் என்ன சொல்ல போகின்றன?

click me!