ரயிலில் இருந்து புதருக்குள் தூக்கி வீசப்பட்ட இளைஞர் 48 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்பு!

By SG BalanFirst Published Jun 6, 2023, 3:09 PM IST
Highlights

ரயில் விபத்துக்குள்ளபோது இளைஞர் துலால் மஜும்தார் அருகில் உள்ள புதருக்குள் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 48 மணிநேரம் கழித்து மீட்கப்பட்டுள்ளார்.

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தத் தொடங்கியுள்ள நிலையில், விபத்து நிகழ்ந்த சுமார் 48 மணிநேரம் கழித்து அசாமைச் சேர்ந்த இளைஞர் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் 275 பயணிகள் பலியாகியுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இன்னும் அடையாளம் காண முடியவில்லை. பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைந்து போன நிலையில் உள்ளன.

பிரக்யா தாக்கூருடன் கேரளா ஸ்டோரி படம் பார்த்த பெண் முஸ்லிம் காதலருடன் மாயம்!

மீட்புப் பணிகள் முடிந்த பின்பு விபத்து நடந்த பகுதியைச் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை விபத்தில் நொறுங்கி நாசமாகிக் கிடந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது, கவிழ்ந்து கிடந்த பெட்டி ஒன்றின் அருகே இருந்த புதருக்குள் ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். அந்த நபர் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ரயில் விபத்துக்குள்ளபோது அந்த இளைஞர் அருகில் உள்ள புதருக்குள் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். படுகாயம் அடைந்து கிடந்த அவர், கிட்டத்தட்ட 48 மணிநேரம் கழித்து பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார். அந்த பயணி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த துலால் மஜும்தார் என்று தெரியவந்துள்ளது.

சென்னை டூ திரிகோணமலை! இலங்கைக்கு இந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் இயக்கம்!

35 வயதான அவர் தன் நண்பர்கள் ஐவருடன் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் ஜென்ரல் பெட்டியில் பயணித்துள்ளார். இவருடன் வந்த 5 பேரும் உயிர் பிழைத்தார்களா என்று இன்னும் தெரியவில்லை. விபத்து நிகழ்ந்து 2 நாள் ஆன பின்பு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டது உண்மையிலேயெ அதிசயம்தான் என அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் சுபாஜித் கிரி சொல்கிறார்.

துலால் மஜும்தார் திங்கட்கிழமை புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம்் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னும் விடுபடவில்லை என்றும் சுய நினைவு இல்லாமல்தான் பேசிவருகிறார் எனவும் மருத்துவர்கள் சொல்கின்றனர். இதனால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்னர்.

மேக் புக் வாங்கணுமா! வந்தாச்சு 15 இன்ச் மேக் புக் ஏர்! ஆப்பிள் கொடுத்த அட்டகாசமான அப்டேட்!

click me!