கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது தெரியுமா ? நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

By Raghupati R  |  First Published Nov 7, 2022, 6:01 PM IST

கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அதனை கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.


திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் அறிவியல் அறிஞர் சர்.சந்திரசேகர் வெங்கட்ராமன் 1888-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார். அவருடைய தந்தை பெயர் சந்திரசேகர் அய்யர். அவர் விசாகபட்டினத்தில் உள்ள கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றினார். அதனால் சந்திரசேகர் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார்.

சர் சி.வி.ராமன்:

Latest Videos

1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் அவர் சேர்ந்தார். 1907 ஆம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தன் வீட்டின் ஒரு பகுதியை அறிவியல் ஆய்வுகூடமாக மாற்றினார். கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கருவிகளை உருவாக்கினார்.

undefined

இதையும் படிங்க.தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. எப்போது தேர்வு தெரியுமா ? முழு விபரம்

கடல் பயணம்:

அந்த கருவிகளை வைத்துக்கொண்டு தனது ஆய்வை தொடங்கினார். திடீரென்று தனது அரசு பணியை வேண்டாம் என்று முடிவு செய்தார்.  1917 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக சேர்ந்து பணியாற்றினார். இந்த நிலையில் 1921 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் முதன் முதலாக ஐரோப்பாவுக்கு கடல் பயணம் செய்தார். அப்போது ஆழ்கடலின் நீரில் இருந்து வெளிப்பட்ட அழகிய நீல நிறம் ராமனின் கவனத்தை ஈர்த்தது.

கடலின் நீல நிறம்:

சந்திரசேகர் வெங்கட்ராமன் அறிவியல் துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டி லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் பெல்லோசிப் 1924-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஐரோப்பாவில் இருந்து இந்தியா திரும்பியவுடன் காற்று, நீர், பனிக்கட்டி மற்றும் குவார்பஸ் போன்ற ஒளி ஊடுருவும் ஊடகங்களின் மூலக்கூறுகளால் ஏற்படும் ஒளிச்சிதறல் பற்றி கருத்தியல் மற்றும் சோதனை இயல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதையும் படிங்க.டிக்டாக் வீடியோ போடாத.! சினிமா துணை நடிகையை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.!

ராமன் விளைவு:

அவர் செய்த சோதனையில் சிதறிய ஒளியானது படுகின்ற ஒளியில் இருந்து மாறுபட்டது என்பதை காட்டியது. இதுவே புதிய விளைவுகளை கண்டுபிடிக்க வழிவகுத்தது. இதற்காக ராமன் தொடர்ந்து 7 ஆண்டுகள் பணியாற்றினார். 1928-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தான் கண்டுபிடித்த விளைவுக்கு ராமன் விளைவு என்று பெயரிட்டார்.

நோபல் பரிசு:

1929-ம் ஆண்டு இங்கிலாந்து அரசி சர் என்ற பட்டத்தை ராமனுக்கு வழங்கினார். இதனால் தான் அவர் சர்.சி.வி.ராமன் என்று அழைக்கப்படுகிறார். அதே ஆண்டு பிரிட்டன் அரசு அவருக்கு நைட்ஹீட் என்ற பட்டம் வழங்கி கவுரவித்தது. ராமன் விளைவை கண்டுபிடித்ததற்காக அவருக்கு 1930-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க..கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் - காதலி குடும்பத்தின் ‘அந்த’ செயல் !!

click me!