திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை 11 மணி நேரம் மூடல்.. அனைத்து தரிசனங்களும் ரத்து..

By Thanalakshmi V  |  First Published Nov 7, 2022, 1:33 PM IST

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் நாளை 11 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது. 


நாளை நவ.8 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2.39 மணியளவில் தொடங்கி, மாலை 6.19 மணியளவில் முடிவடைகிறது. 

மேலும் படிக்க:நவம்பரில் சந்திர கிரகணம்! அதுவும் சிவப்பு நிறத்தில்.! அடுத்த 3 ஆண்டுகளுக்கு.? நாசா வெளியிட்ட முக்கிய தகவல்!

Latest Videos

முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி, 5.12 மணி வரை இருக்கும் என்றும் சென்னையில் மாலை 5.39 மணியளவில் கிரகணத்தை பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் மூடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:ஒன்றாக வருகிறது பௌர்ணமியும் கிரகணமும்… இந்தாண்டு அன்னாபிஷேகம் எப்போது? முழு விவரம் உள்ளே!!

மேலும் நாளை இலவச தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் முடிந்ததும், இரவு 7.30 மணிக்கும் மேல் வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

click me!