பிரபல ஆன்லைன் ஃபேன்டஸி கேமிங் தளமான ட்ரீம்11ல் சுமார் 1.5 கோடி வென்றுள்ளார் காவலர் ஒருவர். இதனையடுத்து பிம்ப்ரி சின்ச்வாட் போலீஸ் கமிஷனரேட் சப் இன்ஸ்பெக்டர் சோம்நாத் ஜெண்டே என்பவர் தனது கணக்கில் வென்ற பணத்தைப் பெறத் தொடங்கியுள்ளார். ஆனால் அந்த மகிழ்ச்சி அவருக்கு குறுகிய காலம் தான் நீடித்துள்ளது.
அந்த போலீஸ் அதிகாரி இப்போது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார், அவரிடம் கேட்கப்படும் முக்கிய கேள்வி என்னவென்றால், அவர் போலீஸ் சேவையில் தீவிரமாக பணியாற்றும் போது இதுபோன்ற விளையாட்டில் பங்கேற்றிருக்க முடியுமா? என்று தான். அந்த போலீஸ் அதிகாரி அளித்த தகவலில் "அந்த 1.5 கோடி லாபத்தில், பணம் எதுவும் கிடைக்காது என்று தான் நினைத்தேன், ஆனால் நேற்று 2 லட்சம் எனது கணக்கிற்கு வந்த நிலையில், அதில் இருந்து 60,000 எடுத்துக்கொண்டு, ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் என் கணக்கில் வந்தது என்பர் கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
undefined
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் அந்த பணத்தை கொண்டு அவர் வீட்டில் வாங்கிய கடனை அடைப்பதாக காவலர் கூறுகிறார். மீதிப் பாதியை நிரந்தர வைப்புத் தொகையில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டியைத் தன் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகப் பயன்படுத்துவார் என்றும் கூறினார். "காவல் துறையில் பணிபுரியும் போது இதுபோன்ற ஆன்லைன் கேம்களில் பங்கேற்கலாமா? இது விதிகளை பின்பற்றுகிறதா? இந்த விளையாட்டு சட்டப்பூர்வமானதா? இவ்வாறு பெறப்பட்ட பணத்தைப் பற்றி ஊடகங்களில் பேச முடியுமா? இதெல்லாம் விதிகளுக்கு உட்பட்டதா?. இவை அனைத்தும் விசாரணை டிசிபி ஸ்வப்னா கோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பிம்ப்ரி சின்ச்வாட் ஏசிபி சதீஷ் மானே கூறினார்.
எங்கள் உத்தரவை மாகாராஷ்டிரா சபாநாயகர் மீற முடியாது: உச்ச நீதிமன்றம் காட்டம்!
ட்ரீம்11, பல்வேறு விளையாட்டுகளுக்கு ஃபேன்டஸி கேமிங் தளத்தை வழங்குகிறது, இது இந்தியாவின் முதல் கேமிங் ஸ்டார்ட்அப் ஆகும், இதன் மதிப்பு $1 பில்லியன் (சுமார் ₹ 7,535 கோடி) ஆகும். ஃபேன்டஸி கேமிங்கிற்கும் சூதாட்டத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் காரணமாக இது கடந்த காலங்களில் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம், 2008 இல் நிறுவப்பட்டது மற்றும் இப்போது 110 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.