சைவம் கேட்டா அசைவம் கொடுக்குறாங்க.. Zomato நிறுவனத்திற்கு வந்த தலைவலி - 1 லட்சம் அபராதம் விதிப்பு!

By Ansgar R  |  First Published Oct 13, 2023, 4:39 PM IST

New Delhi : ஜோத்பூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் தீர்வு மன்றம், சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவை தவறாக டெலிவரி செய்ததாகக் கூறி, இரு முன்னணி உணவு தொடர்பான நிறுவனங்களுக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜோத்பூர் மாவட்டத்தில், ஒரு நபர் பிரபல McDonald நிறுவனத்தில் இருந்து சைவ உணவுகளை ஆர்டர் செய்த நிலையில், அதற்கு மாற்றாக அந்த நபருக்கு Zomato மூலம் அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நுகர்வோர் தீர்வு மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 ஐ மீறியதற்காக இரு நிறுவனங்களுக்கும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, Zomato நிறுவனம் "அந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் பணியில் இருப்பதாக" தெரிவித்துள்ளது. மேலும் Zomato, வாடிக்கையாளருடனான உறவை நிர்வகிக்கும் சேவை விதிமுறைகளை கடைபிடிக்கிறது என்றும், அதேநேரத்தில் Zomato உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான உதவியாளராக மட்டுமே செயல்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் உணவு ஆர்டர்களை பொறுத்தவரை தரம் மற்றும் தவறான டெலிவரிக்கும் உணவகப் பங்குதாரரே பொறுப்பு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆகையால் இந்த தீர்ப்பு பொறுப்பில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்யாமல் அளிக்கப்பட்டுள்ளது என்று Zomato சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உணவின் தரம் மற்றும் அது தவறாக அளிக்கப்படுவது ஆகியவை உணவை தயார் செய்த நிறுவனத்தையே சேரும், உணவை உரிய நிறுவனத்திடம் இருந்து பெற்று, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி மட்டுமே எங்களுடையது என்று தெரிவித்துள்ளது Zomato. ஆகையால் இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 1 லட்சம் அபாரதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளது அந்நிறுவனம்.

புக் செய்த கார்.. டைம் ஆனதால் ரத்து செய்த பெண்.. ஆத்திரத்தில் ஆபாச போட்டோ, வீடியோ அனுப்பிய டிரைவர்..!

click me!