ஃப்ரீசரில் மறந்து வைக்கப்பட்ட உடல்.. 17 நாட்கள் கழித்து வெளியே எடுக்கப்பட்ட அதிர்ச்சி - அவ்வளவு அலட்சியமா?

By Ansgar R  |  First Published Oct 13, 2023, 5:06 PM IST

Noida : கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (ஜிம்ஸ்), சவக்கிடங்கில் ஒரு 70 வயது நோயாளியின் உடல் சுமார் 17 நாட்களாக கவனிப்பாரற்று கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரபிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் உத்தரவிட்டுள்ளார். 


அந்த நோயாளி கடந்த ஜூலை 22 அன்று மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 23ம் தேதி அன்று இறந்துள்ளார். அதன் பிறகு அந்த நபரின் உடல் சவக்கிடங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நபர், சிகிச்சையின் போது தொடர்புகொள்ளமுடியாத நிலையில் இருந்தார் என்று GIMS வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த வார தொடக்கத்தில், சடலம் சவக்கிடங்கில் 17 நாட்கள் கவனிக்கப்படாமல் வைக்கப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்தது, மேலும் இந்த சம்பவத்தை மாநில அரசு கவனத்தில் கொண்டது, மேலும் சுகாதார அமைச்சரான பதக், நேற்று வியாழக்கிழமை, என்ன நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி வேதனை!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறந்த ஒருவரின் உடல் சுமார் 17 நாட்களாக ஃப்ரீசரில் மறந்து வைக்கப்பட்ட சம்பவம் மிகவும் உணர்ச்சிகரமான ஒன்று என்று அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

"GIMS இயக்குனரிடம் விளக்கம் பெற மருத்துவக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று மாநில அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நிறுவன ஊழியர்கள் கவனக்குறைவாக உடலை 17 நாட்கள் ஃப்ரீசரில் வைத்திருந்து அதை மறந்துவிட்டனர். துணை முதல்வர் பதக், முழு சம்பவம் குறித்தும் விசாரிக்கப்பட்டு, காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்து யார்? அவர்கள் அவரை பற்றி தகவல்கள் அறிய முயற்சித்தார்களாக?. 17 நாட்கள் அவரை யாரும் தேடி வரவில்லையா? என்று பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சைவம் கேட்டா அசைவம் கொடுக்குறாங்க.. Zomato நிறுவனத்திற்கு வந்த தலைவலி - 1 லட்சம் அபராதம் விதிப்பு!

click me!