congress: rahul:காலியாகும் காங்கிரஸ் கூடாரம்!வெளியேறிய 7வது பெரிய தலைவர் குலாம் நபி ஆசாத்: இதுவரை எத்தனை பேர்?

By Pothy RajFirst Published Aug 26, 2022, 4:15 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் வெளியேறியதன் மூலம்,  2022ம் ஆண்டில்  7வது மிகப்பெரிய தலைவர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் வெளியேறியதன் மூலம்,  2022ம் ஆண்டில்  7வது மிகப்பெரிய தலைவர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், இன்று குலாம் நபி ஆசாத் வெளியேறியது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கட்சியா? பாஜகவில் சேர்வாரா குலாம் நபி ஆசாத்? வலைவிரிப்பு தொடங்கியது

இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் விலகியுள்ளது அந்தக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

காலத்துக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளாதது, மூத்த தலைவர்கள் ஆதிக்கம், கட்சித் தலைமை துடிப்புடன் செயல்படாதது, முடிவு எடுப்பதில் தாமதம், உட்கட்சிப் பூசல் போன்றவை காங்கிரஸ் கட்சியின் சரிவுக்கு முக்கியக் காரணம். 

ஜெய்வீர் ஷெர்கில்
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராகவும் இளம் தலைவராகவும் இருந்தவர் ஜெய்வீர் ஷெர்கில். கடந்த வாரம் திடீரென காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் சிந்தாந்தங்கள் மற்றும் இன்றைய இளைஞர்கள் மற்றும் நவீன இந்தியாவுக்கு ஏற்றார்போல் இல்லை. பலமுறை சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறி ராஜினாமா செய்தார்.

கபில் சிபல்
காங்கிரஸ் தலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக போர்க்கொடி தூக்கியவர் கபில் சிபல். மாநிலங்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக கபில் சிபல் அறிவித்தார். அவருக்கு சமாஜ்வாதிக் கட்சி ஆதரவு தெரிவித்ததையடுத்து, காங்கிரஸிலிருந்து விலகினார். 

காங்கிரஸிலிருந்து வெளியேற ராகுல் காந்தியே காரணம்: குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

சுனில் ஜக்கார்
பஞ்சாப் காங்கிரஸில் மூத்த தலைவர் சுனில் ஜக்கார். கடந்த மே மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மீண்டுவர தலைமைக்கு விருப்பமில்லை எனக் கூறி காங்கிரஸிலிருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சில நாட்களில் பாஜகவில் சேர்ந்த சுனில் ஜக்காரை பாஜக வாரி அணைத்துக்கொண்டது.

ஹர்திக் படேல்
குஜராத்தில் பட்டிதார் சமூகத்தின் மத்தியில் புகழ்பெற்றவராக இருந்த ஹர்திக் படேல் கடந்த மே மாதம் காங்கிரஸ்கட்சியிலிருந்து திடீரென விலகினார். நாடு பிரச்சினைகளைச் சந்திக்கும்போது தலைவர்கள் தேவை, ஆனால் தேசம் பிரச்சினைகளைச் சந்திக்கும்போது காங்கிரஸ் தலைவர்கள் வெளிநாடு செல்கிறார்கள் எனக் கூறி ஹர்திக் படேல் காங்கிரஸிலிருந்து விலகினார்.

அஷ்வானிக் குமார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வானிக் குமார் காங்கிரஸ் கட்சியுடனான 40 ஆண்டுகால உறவை முறித்துக்கொண்டு விலகினார். இது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அனுபவமான தலைவரை காங்கிரஸ்கட்சி இழந்தது. காங்கிரஸ் கட்சி தன்னைத் தானே தற்கொலை செய்துகொள்கிறது, மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை, தேசம் சிந்திக்கும் வழியில் காங்கிரஸ் சிந்திக்கவில்லை எனக் கூறி விலகினார். 

ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா? ஜார்க்கண்ட் ஆளுநர் இன்று முடிவு

அமரிந்தர் சிங்
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பலமாக இருந்தவர், பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இருந்தவர் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங். பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலுக்கு முன் ஏற்பட்ட குழப்பம், சித்துவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் போன்றவை அமரிந்தர் சிங்குக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் உரசலையும், மோதலையும் ஏற்படுத்தியது. இதனால் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அமரிந்தர் சிங் புதிய கட்சியைத் தொடங்கினார்.

ஆர்பிஎன் சிங்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தலைவர்களில் முக்கியமானவர் ஆர்பிஎன் சிங். குலாம் நபி ஆசாத்துக்கு அடுத்தார்போல் முக்கியமான இடத்தில் இருந்தவர் ஆர்பிஎன் சிங். உ.பியில் காங்கிரஸ் கட்சி தேர்தல் நேரத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் இருந்தபோது அங்கு முன்னெடுத்துச்சென்றவர் ஆர்பிஎன்சிங். ஆனால், தேர்தலுக்கு பின் காங்கிரஸ் தலைமை மீதுஅதிருப்தி அடைந்த ஆர்பிஎன் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்தார்.

இளம் தலைவர்கள்

இது தவிர ஜோதிர் ஆதித்யாசிந்தியா காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து மத்திய அமைச்சராக உள்ளார். ஜிதின் பிரசதா, சுஷ்மிதா தேவ், கோவா முன்னாள் முதல்வர் லூசின்ஹோ பிளாரியோ ஆகியோர் விலகி திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தனர்.

முகுல் சங்மா, பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி, உபி. காங்கிரஸ் துணைத் தலைவர் லலிதேஷ் திரிபாதி ஆகியோரும் காங்கிரஸிலிருந்து விலகினர்.

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு

பாஜக முதல்வர்கள் 

இதுமட்டுமல்லாமல் பாஜகவில் சேர்ந்து அசாம் முதல்வராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா காங்கிரஸில்இருந்து 2015ம் ஆண்டு பாஜகவுக்கு சென்றார். 2016ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகிய பிரேன் சிங், பாஜகவில் சேர்ந்தார்.2017ம் ஆண்டு மணிப்பூரில் முதல்வராக பிரேன் சிங் பதவி ஏற்றார்.

அருணாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியி்ட்டு வென்ற பீமா கண்டு, 2016ல் பாஜகவில் சேர்ந்து அந்த மாநில முதல்வராகினார். கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவரான பிசி சாக்கோ தேர்தலுக்கு முன்பாக அந்தக் கட்சியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் சேர்ந்தார்.

2013 முதல் 2019 வரை
2013ம் ஆண்டுவரை 2019ம் ஆண்டுவரை காங்கிரஸில் இருந்து ஏராளமான தலைவர்கள் வெளியேறினர். சங்கர்சிங் வகேலா, நாராயன் தத் திவாரி, யாஷ்வால் ஆர்யா, ரவி கிஷன், பர்கா சுக்லா சிங், விஷ்வஜித் ரானே, அலெக்சாண்டர் லாலு ஹெக், யாங்துங்கோ பாட்டன், அசோக் சவுத்ரி ஆகியோர் 2017,2018ல் விலகினர். 2019ல், நடிகை ஊர்மிளா மடோன்கர், மசூம் நூர், அல்பேஷ் தாக்கூர், கிரிபாசங்கர் சிங், பனபாக லட்சுமி, அப்துல்லா குட்டி, ராதாகிருஷ்ண விகேபடேல், புவனேஷ்வர் கலிதா, சஞ்சய் சிங், எஸ்எம்கிருஷ்ணா, நாராயண் ரானே, பிரியங்கா சதுர்வேதி

பிரதமர் மோடி பாதுகாப்புப் படையில் மின்னல் வேகத்தில் ஓடும் முதோல் வேட்டை நாய்; இதன் சிறப்புக்கள் என்னென்ன?

2020, 21ம்ஆண்டுகளில் விலகிய தலைவர்கள்
தமிழகத்தைச் சேர்ந்த குஷ்பு சுந்தர் காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் சேர்ந்தார். கோவிந்தாஸ் கொந்துஜம், விஜயன் தாமஸ், ஏ.நமசிவாயம், வி.எம். சுதீரன், கீர்த்தி ஆசாத், அதிதி சிங், ரவி எஸ் நாயக் உள்ளிட்ட பலர் வெளியேறினர்.

click me!