ராகுல் காந்தி முதிர்ச்சியில்லாதவர். அவசரச் சட்டத்தை அவர் கிழித்தபோதே காங்கிரஸ் கட்சியின் சரிவு தொடங்கிவிட்டது என்று மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தனது விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி முதிர்ச்சியில்லாதவர். அவசரச் சட்டத்தை அவர் கிழித்தபோதே காங்கிரஸ் கட்சியின் சரிவு தொடங்கிவிட்டது என்று மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தனது விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சியின் அனைத்துப் பொறுப்புகள், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். இது தொடர்பாக 5 பக்க கடிதத்தையும் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் அனுப்பி வைத்தார்.
Ghulam Nabi Azad: congress : குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து திடீர் விலகல்
சோனியா காந்தியின் மருத்துவ சிகிச்சைக்காக அவருடன் ராகுல் காந்தி, பிரியங்க காந்தி இருவரும் உடன் சென்றுள்ள நிலையில், குலாம் நபி ஆசாத் இந்த முடிவை எடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏற்கெனவே கபில் சிபல், அஸ்வினி குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் விலகியநிலையில் குலாம் நபி ஆசாத் விலகியது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய இழப்பையும், பின்னடைவையும் தரும்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் விலகியதற்கு காரணங்கள் குறித்து குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் ராகுல் காந்தியால்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் ராகுல் காந்தி கட்சிக்குள் மூத்த தலைவர்களை மதிக்காமல் செயல்பட்டது, சிறுபிள்ளைத்தனமாகவும், முதிர்ச்சியற்றும் செயல்பட்டதுதான் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விகளுக்கு காரணம் என்று குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிலும் குலாம் நபி ஆசாத் தன்னுடைய கடிதத்தில் காங்கிரஸ் கட்சி்யின் தொடர் சரிவுக்கு தொடக்கப் புள்ளியாக ராகுல்காந்தியின் முதிர்சியற்ற செயல்தான் காரணமாக அமைந்தது எனத் தெரிவித்துள்ளார்.
அவர் கடிதத்தில் குறிப்பிடுகையில் “ ராகுல் காந்தியின் முதிர்ச்சியற்ற தன்மைக்கு மிகப்பெரிய உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். 2013ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது, காங்கிரஸ் அரசு கொண்டு வந்த அவசரச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கிழித்து எறிந்தார். ராகுல் காந்தியின் இந்த செயல் நாட்டின் ஒட்டுமொத்த ஊடகத்தையும் ஈர்த்தது. விமர்சிக்கப்பட்டது.
எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதுகுற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவர்களை தகுதிநீக்கம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கும் சிறப்பு அவசரச்சட்ட மசோதாவை ராகுல் காந்தி கிழித்தார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் அரசையும் கடுமையாக விமர்சித்து, முட்டாள்தனம் என்றுகூறி பிரதமர் மன்மோகன் சிங்கை சங்கடப்படுத்தினார்.
ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா? ஜார்க்கண்ட் ஆளுநர் இன்று முடிவு
ராகுல் காந்தியின் சிறுபிள்ளைத்தனமான செயல், பிரதமர் மற்றும் இந்திய அரசின் மதிப்பை குறைத்துவிட்டது. ராகுல் காந்தியின் இந்த ஒரு செயல் 2014ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு முக்கியமானதாக அமைந்தது.
இவ்வாறு குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டுள்ளார்