Adhir Ranjan Chowdhury:ஜனாதிபதி குறித்து காங்கிரஸ் எம்.பி. ‘டங்க் ஸ்லிப்’ பேச்சு: வரிந்து கட்டும் பாஜக

By Pothy RajFirst Published Jul 28, 2022, 1:30 PM IST
Highlights

காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதி முர்மு குறித்த சர்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக கடும் அமளியில் ஈடுபட்டது.இதனால்,நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதி முர்மு குறித்த சர்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக கடும் அமளியில் ஈடுபட்டது.இதனால்,நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

ஆனால், நாபிறழில் அவ்வாறு பேசிவிட்டேன் என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்புக் கோரியுள்ளார்.

ரூ.28 கோடி பணம், தங்க நகைகள்: பர்தா சாட்டர்ஜிக்கு வீட்டிலிருந்து அமலாக்கப்பிரிவு பறிமுத

ராஷ்ட்ரபதி என்று கூறுவதற்கு பதிலாக ராஷ்ட்ரபத்னி என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதுதான் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

ஜனாதிபதியை அவதூறாகப் பேசியதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ இந்த வார்த்தையின் அர்த்தம் தெரிந்துதான் சவுத்ரி பயன்படுத்தியுள்ளார். ஜனாதிபதியையும் அவரின் அலுவலகத்தையும் அவதூறு செய்யும் நோக்கில் பேசியுள்ளார்.

இந்த தேசத்திடமும், ஜனாதிபதியிடமும் காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கோர வேண்டும்.பழங்குடியினத்திலிருந்து ஏழைக் குடும்பத்திலிருந்து ஒரு பெண் ஜனாதிபதியாகி வரலாறு படைத்துள்ளார். 

பார்த்தா சாட்டர்ஜியை நீக்க முதலில் டுவீட்; திடீரென பல்டி அடித்த மூத்த தலைவர்; என்ன நடந்தது?

ஆனால், இதை காங்கிரஸ் அவதூறு செய்கிறது. ஜனாதிபதி வேட்பாளராக முர்முவை பாஜக முன்மொழிந்ததில் இருந்தே, காங்கிரஸ் அவதூறாகப் பேசி வந்தது.அவரை பொம்மை என்றும், கொடூரத்தின் அடையாளம் என அந்தக்கட்சித் தலைவர்கள் பேசினார்கள். முர்மு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபின்பும்கூட அவருக்கு எதிரானத் தாக்குதலை நிறுத்தவில்லை”எ னத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: 

இந்தியாவின் ஜனாதிபதி பிராமனராக, பழங்குடியினராக இருந்தாலும், அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். விஜய்சவுக் பகுதியில் நேற்று போராட்டம் நடத்தியபோது, எங்கு போகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். நான் ராஷ்ட்ரபத்னி என்று தவறாகக் கூறிவிட்டேன்.

நான் தவறுதலாகப்பேசிய வீடியோ காட்சியை காண்பிக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதை பாஜக பிரச்சினையாக மாற்றுகிறது. தேசத்தின் உயர்ந்த இடத்தில் இருப்பவரை அவதூறு செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. பாஜகவிடம் ஏதுமில்லை என்பதால் இந்த விவகாரத்தில் மசாலா சேர்க்கிறது

ஜனாதிபதியை ராஷ்ட்ரபத்னி என்று என் நாபிறழில் நான் பேசியது. தவறாக உச்சரிக்கப்பட்டதுதான். தேசத்தின் ஜனாதிபதியை அவதூறு செய்யும் எந்த நோக்கமும் இல்லை. ஆனால், சிறிய விஷயத்தை பாஜக பெரிதாக்குகிறது.

2024இல் பாஜகவுக்கு தோல்வி உறுதி.. திரும்பவும் பாஜக ஆட்சிக்கு வராது.. கொந்தளிக்கும் மம்தா பானர்ஜி.!

இரு அவைகளையும் முடக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேசத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கோருகிறது.

நான் என்ன செய்ய வேண்டும். நான் பேசியது அப்பட்டமான தவறான வார்த்தைதான். நான் இதைச் சொல்ல ஊடகத்தினரைத் தேடினேன்.இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள தேடினேன் என்னால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்


 

click me!