shivamooga newsஷிவமோகாவில் பதற்றம்:கத்திக்குத்து சம்பவத்தில்ஒருவர் மீது போலீஸார் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது

By Pothy Raj  |  First Published Aug 16, 2022, 1:55 PM IST

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நேற்று நடந்த மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதில் சந்தேகிக்கப்படும் நபரை போலீஸார் பிடிக்க முயன்றபோது அவர் தாக்க முற்படவே அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.


கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நேற்று நடந்த மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதில் சந்தேகிக்கப்படும் நபரை போலீஸார் பிடிக்க முயன்றபோது அவர் தாக்க முற்படவே அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

ஷிவமோகாவில் உள்ள மர்னாமி பைலு பகுதியைச் சேர்ந்த முகமது ஜபி என்ற சார்பி(வயது30) என்பவரை போலீஸார் சுட்டனர். தற்போது முகமது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tap to resize

Latest Videos

மீண்டும் பதற்றத்தில் கர்நாடகா! ஷிவமோகாவில் ஒருவருக்கு கத்திக்குத்து 144 தடை உத்தரவு

ஷிவமோகா நகரில் உள்ள அமீர் அகமது பகுதியில்  ஒரு தரப்பினர் சாவர்க்கர் புகைப்படம் அடங்கிய பேனரை அமைக்க முயன்றனர். அப்போது மற்றொரு தரப்பினர் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் படத்தை வைக்கப்போவதாகக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே முதலில் லேசாகத் தொடங்கிய வாக்குவாதம், பின்னர் கடுமையாக மாறி கைகலப்பு வரை சென்றது. இரு தரப்பிலும் ஏராளமானோர் குவிந்ததால் பதற்றம் அதிகரித்தது. இதில் ஒரு தரப்பினர் திப்பு சுல்தான் போஸ்டரைக் கிழித்தனர். இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

https://tamil.asianetnews.com/india/bilkis-bano-case-under-the-guj-remission-policy-all-11-life-sentenced-convicts-were-released--rgovxx

இதற்கிடையே பிரேம்சிங் (வயது20) என்ற இளைஞர் தனது கடையை பூட்டிவிட்டு நேற்று இரவு வீடுக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்துக்குப்பின் ஷிவமோகா நகர் முழுவதும் போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வழக்கில் போலீஸார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, நதீம், தன்வீர், சார்பி, அப்துல் ரஹ்மான் ஆகியோரைக் கைது செய்தனர். இதில் வினோபா நகரில் இருந்த சார்பியை போலீஸார் கைது செய்ய முயன்றபோது, அவர்களை தாக்க முற்பட்டு தப்பி ஓட முயன்றார்.

அப்போது காவல் துணை ஆய்வாளர் மஞ்சுநாத் எஸ் குகி தனது பாதுகாப்பாக கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சார்பியின் காலில் சுட்டனர். இதில் அவர் தப்பி ஓடமுடியாமல் சுருண்டு விழுந்தார்.உடனடியாக சார்பியை மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நலத்திட்டங்களை இலவசங்கள் என கொச்சைப்படுத்துவது வேதனை: பாஜகவை கிழித்த தெலங்கானா முதல்வர்

சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் அலோக் குமார் கூறுகையில் “ கத்தியால் குத்தப்பட்டநபர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர், துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டபோது கடையை அடைத்துவிட்டுச் செல்லும்போது அவர் தாக்கப்பட்டுள்ளார்.

ஆனால், கத்தியால் குத்தப்பட்ட சிங் மோதலில் ஈடுபடவில்லை.இதுவரை 4பேரைக் கைதுசெய்துள்ளோம். இவர்களுக்குப் பின்னணியில்ஏதேனும் அமைப்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அடுத்த 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலமாகவே இருக்கும்” எனத் தெரிவித்தார்.

ஷிவமோகாவில் நடந்த மோதலையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 

click me!