பிரபலமான டோமினோஸ் பீட்ஸாவைத் தயாரிக்கப் பயன்படும் மாவு எந்தஅளவு அசுத்தமாக இருக்கிறது, அதன் மீது என்னென்ன பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து சமூகஊடகத்தில் வெளியான புகைப்படங்கள் அதிர்ச்சியை அளித்துள்ளன.
பிரபலமான டோமினோஸ் பீட்ஸாவைத் தயாரிக்கப் பயன்படும் மாவு எந்தஅளவு அசுத்தமாக இருக்கிறது, அதன் மீது என்னென்ன பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து சமூகஊடகத்தில் வெளியான புகைப்படங்கள் அதிர்ச்சியை அளித்துள்ளன.
இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பி உண்ணும் உண்ணும் உணவுகளில் ஃபாஸ்ட்புட்டுக்கு அடுத்தார்போல் கேஎப்சிசிக்கன், பீட்சா, பர்கர் வகைகள் முக்கிய இடம் பெறுகின்றன.
பீகார் அமைச்சரவை விரிவாக்கம்: நிதிஷ் அரசில் 31 அமைச்சர்கள்: ஆர்ஜேடிக்கு அதிகம்
அதிலும் மெட்ரோ நகரங்களில் பெரும்பாலான இளைஞர்களுக்கு உணவாக பீட்சாவும், பர்கருமே இருந்து வருகிறது. ஆனால் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ருசியை மட்டுமே பார்க்கிறோம், அது எத்தகையசூழலில் தயாரிக்கப்படுகிறது என்பதை கவனிக்கப்பதில்லை, அதில் அக்கறை கொள்வதில்லை.
பானிபூரி தாயாரிப்பது குறித்து ஏற்கெனவே ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அதில் ஒரு இளைஞர் பானிபூரி செய்யப்பயன்படும் மாவுமீது ஏறிநின்று மிதிக்கும் காட்சி இருந்தது. இது பானிபூரி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோல் அவ்வப்போது நாம் சாப்பிடும் உணவுகள் சுகாதாரமற்ற வகையில் தயாரிக்கப்படுவது குறித்து செய்திகள் வந்தாலும் அதை செய்தியாக பார்த்து கடந்து விடுகிறோம். அதனால்தான் தொடர்ந்து சம்பவங்கள் நடக்கின்றன.
எஸ்பிஐ வங்கியின் சிறப்பு வைப்புத் திட்ட வட்டி உயர்வு அறிவிப்பு; மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகை!!
சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு டோமினோஸ் பீட்சா கடையில் பீட்ஸா தயாரிக்கப்படும் மாவு சுகாதாரமில்லாமல் இருக்கும் புகைப்படத்தை நெட்டிஸன் ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த மாவு மீது, தரையைத் துடைக்க உதவும் பிரஷ், கழிவறையை சுத்தம் செய்யும் பிரஷ், ஒட்டடைஅடிக்க பயன்படும் குச்சி போன்றவை அந்த மாவு மீது இருந்தது.
இந்தப் புகைப்படங்களை ஷாகில் கர்நானி என்ற நெட்டிஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “ இப்படித்தான் டோமினோஸ் பீட்ஸாக்கள் புத்தம் புது பீட்ஸாகளா தயாரிக்கப்படுகிறாதா. வேதனையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு இயக்குநரகம், கர்நாடக சுகாதாரத்துறை ஆகியோருக்கும் டேக் செய்து இந்தபுகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
This is how serves us fresh Pizza! Very disgusted.
Location: Bangalore pic.twitter.com/1geVVy8mP5
ஆனால், இந்த புகைப்படங்களுக்கு டோமினோஸ் பீ்ட்சா நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில் “ எங்கள் பீட்சாக்கள் எப்போதுமே உலகத் தரம்வாய்ந்தவை. தரமான சூழலில்தான் தயாரிக்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ஏப்ரல்-ஜூலையில் 40 % அதிகரிப்பு
இந்த சம்பவம் குறி்த்து அந்தக் கடைக்காரரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பீட்சாவின் தரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றில் எப்போதும் சமரசம் இல்லை”எனத் தெரிவித்துள்ளது