குஜராத்தில் கோத்ரா கலவரத்துக்குப்பின் பில்கிஸ் பானு கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டது, அவரின் குடும்பத்தினர் 7 பேரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரையும் கருணையின் அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது.
குஜராத்தில் கோத்ரா கலவரத்துக்குப்பின் பில்கிஸ் பானு கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டது, அவரின் குடும்பத்தினர் 7 பேரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரையும் கருணையின் அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது.
இவர்கள் 11 பேரும் கோத்ரா கிளைச் சிறையில் இருந்து நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். ஜஸ்வந்த்பாய் நை, கோவிந்த்பாய் நை, ஷைலேஷ் பாட், ராதேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் விஹோனியா, பிரதீப் மோர்தியா, பாகாபாய் விஹோனியா, ராஜூபாய் சோனி, மித்தேஷ் பாட், ரமேஷ் சந்தனா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
பில்கின் பானு வழக்கை விட குறைந்த குற்றங்களைச் செய்தவர்கள்கூட இன்னும் சிறையில் வாடும்போது, கொடூரமான கொலைகள், கூட்டுப்பலாத்காரம் செய்த 11 பேரையும் விடுவித்தது குஜராத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் தலீத் சிறுவன் உயிரிழந்த விவகாரம்... சோகத்தில் காங். எம்எல்ஏ ராஜினாமா!!
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ராவில் சபர்மதிஎக்ஸ்பிரஸ் ரயில் எரிப்புச் சம்பவம் நடந்தது. இதில் கரசேவகர்கள் 59 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை மூண்டது.
மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினர் 15 பேரும் ஒரு இடத்தில் அடைக்கமாக இருந்தனர். அப்போது, அங்கு வந்த 30 பேர் கொண்ட கும்பல் பில்கிஸ் பானு குடும்பத்தினரை பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியது.
அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் பில்கிஸ் பானு 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவரைத் தாக்கிய அந்தக் கும்பல் தாக்கி, கூட்டுப் பலாத்காரம் செய்தது. அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 7 பேரை கொலை செய்தது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயதுக் குழந்தையை பாறையில் மோதி அடித்துக் கொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியது.
சாவர்க்கரின் பேனரை அகற்றியதை எதிர்த்து போராட்டம்… ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு!!
இந்த சம்பவம் பெரும் பிரச்சினையை கிளப்பியதையடுத்து, உச்ச நீதிமன்றம் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிபிஐ 11 பேரைக் கைது செய்தனர்.
இந்த அகமதாபாத்தில் நடந்த நிலையில் அங்கிருந்து வழக்கை மாற்றக் கோரி பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதைத் தொடர்ந்து அந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த வழக்கில் தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி பில்கிஸ் பானு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம், பணி, அரசுக் குடியிருப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குஜராத் அரசுக்கு கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதில் குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷியாம் ஷா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறோம் தங்களுக்கு தண்டனைக் குறைப்பு செய்யக் கோரினார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் “ குற்றம் நடந்தது குஜராத்தில், இந்த மனு குறித்து குஜராத் அரசு முடிவு எடுக்கலாம்” எனத் தெரிவித்தது.
இதையடுத்து, குஜராத் அரசு, பஞ்சமால் மாவட்ட ஆட்சியர் சுஜால் மயாத்ரா தலைமையில் குழு அமைத்து குற்றவாளிகள் 11 பேரின் மனுவை ஆய்வு செய்யக் கோரியது. அந்த குழு அளித்த அறிக்கையில் “ பில்கிஸ் பானு பலாத்காரம், 7 பேர் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற 11 பேரையும் விடுவிக்கலாம் எனப் பரிந்துரை செய்தது.” இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குஜராத்அரசு 11 பேரையும் நேற்று விடுவித்தது