ராஜஸ்தானில் தலீத் சிறுவன் உயிரிழந்த விவகாரம்... சோகத்தில் காங். எம்எல்ஏ ராஜினாமா!!

By Narendran S  |  First Published Aug 15, 2022, 11:40 PM IST

ராஜஸ்தானில் தலீத் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேதனையில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 


ராஜஸ்தானில் தலீத் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேதனையில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள சுரானா கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற தலித் சிறுவன் படித்து வந்தார். 9 வயதான அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளார். இதனை கண்ட ஆசிரியர் அந்த மாணவனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சாவர்க்கரின் பேனரை அகற்றியதை எதிர்த்து போராட்டம்… ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு!! 

Tap to resize

Latest Videos

 இதில் படுகாயமடைந்த அந்த சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சிறுவன் உயிரிழந்த ராஜஸ்தான் மாநில அட்ரு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பனாசந்த் மேக்வால் ராஜினாமா செய்துள்ளார்.

இதையும் படிங்க: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி மாயமான ராணுவ வீரர்கள்... 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் உடல் கண்டெடுப்பு!! 

 இது தொடர்பாக அவர் கூறுகையில், ஜலோரில் 9 வயது தலித் மாணவன் மரணம் என்னை மிகவும் பாதித்துள்ளது. நான் எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து அட்டூழியங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று கூறினார். ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே, தலீத் மக்கள் சித்ரவதைக்குள்ளாவதாகக் கூறி, பதவியை ராஜினாமா செய்திருப்பது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

click me!