சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரரின் உடல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு, பழைய பதுங்கு குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரரின் உடல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு, பழைய பதுங்கு குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள சியாச்சின் உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படுகிறது. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்து சால்டோரோ ரிட்ஜ்லைனில் உள்ள பிலாஃபோண்ட் லா மற்றும் பிற வழிகளைப் பாதுகாப்பதற்காக ஆபரேஷன் மேக்தூத்தை தொடங்கியது. பாகிஸ்தானுடன் போரிட 'ஆபரேஷன் மேக்தூத்' நடவடிக்கைக்காக சியாச்சினுக்கு 20 ராணுவ வீரர்கள் கொண்ட குழு அனுப்பப்பட்டன. அப்போது அந்த குழு பனிச்சரிவில் சிக்கியது. அதில் 15 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 5 பேரின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 16 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
இந்த நிலையில் பனிச்சரிவில் சிக்கி காணமல் போன 5 வீரர்களில் ஒருவரின் உடல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அது ராணிகேட்டில் உள்ள சைனிக் குழு மையம் 19 குமாவோன் படைப்பிரிவைச் சேர்ந்த சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அல்மோராவில் உள்ள துவாரஹாட்டில் வசிக்கும் சந்திரசேகர் ஹர்போலா, 1975ல் ராணுவத்தில் சேர்ந்தார். 1984ல் பாகிஸ்தானுடன் போரிட 'ஆபரேஷன் மேக்தூத்' நடவடிக்கைக்காக சியாச்சினுக்கு அனுப்பப்பட்ட 20 பேர் கொண்ட துருப்புக்களில் அவர் ஒருவராக இருந்தார். ஹர்போலாவின் மனைவி சாந்தி தேவி, தற்போது ஹல்த்வானியில் உள்ள சரஸ்வதி விஹார் காலனியில் வசிக்கிறார்.
இதையும் படிங்க: இருட்டறைக்குள் தள்ளப்பட்ட குடிமகனின் மகள் நான்… இணையத்தில் வைரலாகும் கேரள பத்திரிகையாளர் மகளின் பேச்சு!!
ஹர்போலா காணாமல் போன போது, அவர்களுக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகிறது என்றும், அவருக்கு 28 வயது என்றும் சாந்தி தேவி கூறினார். அப்போது அவர்களது மூத்த மகளுக்கு நான்கு வயது, இளையவளுக்கு ஒன்றரை வயது. சந்திரசேகர் ஹர்போலா கடைசியாக ஜனவரி 1984 இல் வீட்டிற்கு வந்ததாகவும் குடும்பத்திற்கு அளித்த வாக்குறுதிகளை விட நாட்டிற்கான தனது சேவைக்கு முக்கியத்துவம் அளித்ததால், தனது கணவர் குறித்து பெருமைப்படுவதாகவும் தேவி கூறினார். இதனிடையே உலகின் மிக உயரமான மற்றும் குளிரான போர்க்களத்தை பாதுகாப்பதில் இந்திய ராணுவத்தின் துருப்புக்கள் காட்டிய தைரியத்தையும் துணிச்சலையும் நினைவுகூரும் வகையில், இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13 அன்று சியாச்சின் தினமாக அனுசரிக்கிறது.