இஸ்ரோ தலைவர் சோம்நாத் உற்சாக நடனம்; வைரல் வீடியோ!!

By Dhanalakshmi G  |  First Published Aug 24, 2023, 11:36 AM IST

இந்தியாவின் சரித்திரத்தில் பதிய வேண்டிய நாள் ஆகஸ்ட் 23, 2023. சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் மறக்க முடியாத நாளாக இந்தியர்களின் மனதில் பதிந்துள்ளது.


சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (இஸ்ரோ) மற்றுமொரு மகுடமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே எந்த நாடும் கால் பதிக்காத நிலவின் தென் துருவத்தில் இந்தியா கால் பதித்து இருக்கிறது என்பது கூடுதல் பெருமையாக அமைந்துள்ளது. 

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும் இஸ்ரோவில் இந்த திட்டத்திற்காக உழைத்தவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை பார்க்க முடிந்தது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் தனது குழுவுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுவது தெரிய வந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

சந்திரயான் 3 வெற்றி.. நிலவில் வரலாற்று சாதனை படைத்து உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா!

அந்த வீடியோவில், சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதைக் கொண்டாடுவதற்காக இஸ்ரோ தலைவரும், அவரது குழுவினரும் நடனமாடுவதைக் காணலாம். சோம்நாத் தனது குழுவினருடன் இணைந்து பாலிவுட் பாடலுக்கு நடனமாடுகிறார். ‘Bollywood.mobi’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளது. 

இதையத்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது. "கடினமாக உழைத்து, பார்டி வைத்து கொண்டாடுவது அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்'',  ''இஸ்ரோ குழுவின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று இன்ஸ்டாகிராம் பயனர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். 

சந்திரயான் 3 : விக்ரம் லேண்டரில் இருந்து நிலவில் கால்பதித்த ரோவர்.. இஸ்ரோ சொன்ன முக்கிய தகவல்..

2019 ஆம் ஆண்டில் சந்திரயான்-2 தோல்வி அடைந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் சரித்திர வெற்றியை பெற்றுள்ளது. இது இந்திய வரலாற்றில் மட்டுமின்றி உலக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்படும் நாளாக அமைந்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bollywood (@bollywood.mobi)

click me!