ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 14, 2023 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக UIDAI சமீபத்தில் அறிவித்தது.
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. 12-இலக்க தனிப்பட்ட அடையாள எண், இந்தியாவில் அடையாளச் சான்றாகவும் முகவரிச் சான்றாகவும் செயல்படுகிறது. இருப்பினும், ஆதாரின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, ஆதார் விவரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள், சேவைகள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் செல்லுபடியாகும்.
எனினும் சில காரணங்களால் ஆதார் எண் செயலிழக்கப்படலாம். அதன்படி ஆதார் எண்ணை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பயன்படுத்தாதது, பொருந்தாத அல்லது கலப்பு பயோமெட்ரிக்ஸ் விவரங்கள் இருப்பது, அல்லது ஆதார் கணக்கில் பல பெயர்கள் இருப்பது அல்லது உங்கள் குழந்தைகள் 5 மற்றும் 15 வயதை அடையும் போது அவர்களின் பயோமெட்ரிக்ஸ் விவரங்களை புதுப்பிக்கத் தவறியது போன்ற பல்வேறு காரணங்களுக்காக உங்கள் ஆதார் எண்ணை செயலிழக்கச் செய்யலாம். ஆதார் செயலில் உள்ளதா என்பதையும் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க, அனைவரும் ஆதார் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று UIDAI அறிவுறுத்தி உள்ளது.
அந்த வகையில் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 14, 2023 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக UIDAI சமீபத்தில் அறிவித்தது. முதலில் ஜூன் 14, 2023 வரை ஆதார் விவரங்களை புதுப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த காலக்கெடு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையை பெற்றவர்கள், அதை புதுப்பிக்கவில்லை எனில் தற்போது புதுப்பித்துக்கொள்ளலாம்.
இந்த வசதியைப் பெற, ஒருவர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அடையாளச் சான்று மற்றும் முகவரியைச் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கமாக, ஒவ்வொரு ஆதார் அட்டை விவரங்களையும் புதுப்பிக்க ₹50 செலவாகும். ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் உங்கள் ஆதார் எண்ணைச் சரிபார்க்க பல வழிகள் உள்ளன. நீங்கள் அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தைப் பயன்படுத்தலாம், 1947 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம் அல்லது ஆதார் பதிவு மையத்தைப் பார்வையிடலாம்.
ஆன்லைனில் ஆதார் விவரங்களை எப்படி புதுப்பிப்பது?
உங்கள் ஆதார் அட்டையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வது விரைவான மற்றும் எளிதான முறையாகும். இது UIDAI இன் டிஜிட்டல் கையொப்பத்துடன் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படம் போன்ற உங்களின் ஆதார் விவரங்களைக் காண்பிக்கும்.
QR குறியீட்டைப் பயன்படுத்தி ஆதாரை எவ்வாறு சரிபார்க்கலாம்