சந்திரயான்-3 நிலவு தரையிறங்க சாதகமான சூழல் இல்லாவிட்டால் என்ன ஆகும்? இஸ்ரோ அதிகாரி விளக்கம்

By SG Balan  |  First Published Aug 21, 2023, 11:25 PM IST

தேவையான எந்த அம்சம் சாதகமாக இல்லை என்றாலும் சந்திரனில் தரையிறங்குவது ஆகஸ்ட் 27ஆம் தேதி தள்ளிப்போகும் என்று இஸ்ரோ இயக்குனர் நிலேஷ் எம். தேசாய் கூறியுள்ளார்.


சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறங்க சாதகமான சூழல் இல்லாவிட்டால், தரையிறங்கும் முயற்சி நிலைமை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"ஆகஸ்ட் 23 ஆம் தேதி, சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, லேண்டர் தொகுதியின் ஆரோக்கியம் மற்றும் நிலவில் உள்ள நிலைமைகளின் அடிப்படையில் அந்த நேரத்தில் தரையிறக்குவது சரியானதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்போம்" என இஸ்ரோ இயக்குனர் நிலேஷ் எம். தேசாய் கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

ஆகஸ்ட் 21ஆம் தேதி செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவர், "தேவையான எந்த அம்சம் சாதகமாக இல்லை என்றாலும் சந்திரனில் தரையிறங்குவது ஆகஸ்ட் 27ஆம் தேதி தள்ளிப்போகும்" என்று கூறியுள்ளார்.

சந்திரயான்-3 விண்கலத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும்? சவாலான கடைசி 15 நிமிடத்தில் நடக்கப்போவது என்ன?

இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் ஞாயிற்றுக்கிழமை சந்திரனுக்கு மிக அருகில் சென்றது. விக்ரம் லேண்டர் அதன் இரண்டாவது மற்றும் இறுதி உந்துவிசையைப் பெற்று நிலவுக்கு மிக நெருக்கமாக, 25 கிமீ தொலைவில் இருக்கிறது என இஸ்ரோ தெரிவித்தது. தற்போது விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முந்தைய பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயம் நிகழும் வரை லேண்டர் காத்திருக்கும் என்றும் இஸ்ரோ கூறியிருக்கிறது.

தரையிறக்கம் எப்போது, ​​எங்கே நடக்கும்?

சந்திரயான்-3 விண்கலத்தின் தரையிறங்கும் தொகுதியான விக்ரம் லேண்டர், ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையாகத் தரையிறங்கும். வெற்றிகரமான தரையிறக்கத்துக்குப் பின், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்த சாதனையை எட்டிய நான்காவது நாடு என்ற சாதனையை இந்தியா வசப்படுத்தும்.

வரலாற்று சிறப்புமிக்க தரையிறங்கும் நிகழ்வு நடைபெறும் நாள் மற்றும் நேரத்தை இஸ்ரோ இன்று ஒரு ட்வீட் மூலம் உறுதி செய்தது. அதில், “சந்திராயன்-3 ஆகஸ்ட் 23, 2023 அன்று இந்திய நேரப்படி மாலை சுமார் 6:04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் மென்மையாகத் தரையிறங்க முயற்சிக்கும். நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய பிறகும், உந்துவிசை தொகுதி பூமியின் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரனைச் சுற்றிக்கொண்டே இருக்கும் எனவும் இஸ்ரோ கூறியிருக்கிறது.

வெற்றிநடை போடும் சந்தியரான்-3! நிலவில் தரையிறங்குவதை பார்த்து ரசிக்க இஸ்ரோ சிறப்பு ஏற்பாடு!

click me!