நிலவை ஆராய உருவான சந்திரயான்-3... ஸ்ரீஹரிகோட்டா வந்தடைந்தது!! எப்போது விண்ணில் பாயும் தெரியுமா?

By Ma riyaFirst Published Jun 2, 2023, 11:28 AM IST
Highlights

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-3 என்ற ராக்கெட் ஜூலை மாதம் அனுப்பப்படவுள்ளது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) நிலவின் தென்துருவம் குறித்து ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. இதனை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பினார்கள். இந்த சந்திரயான்-2 விண்கலம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. ஆனாலும் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ‘லேண்டர்’ கலன் தரையிறங்கும் முன்னே நிலவில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அது செயலிழக்க நேரிட்டது. விண்கலத்தின் இன்னொரு பகுதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 

தற்போது ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு எடுத்துள்ளது. நிலவை ஆர்பிட்டர் ஏற்கனவே சுற்றுவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டுமே அனுப்பினால் போதும் என திட்டமிடப்பட்டுள்ளது. வடிவமைப்பு பணிகள், சோதனை ஓட்டங்கள் ஆகியவை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மீது சந்திரயான்-3 விண்கலம் வருகிற ஜூலையில் விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது.  

இதைத் தொடர்ந்து விண்ணில் அனுப்பி வைப்பதற்கான முன்கட்டப் பணிகளை முன்னிட்டு சந்திரயான்-3 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உல் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அண்மையில் கொண்டு வரப்பட்டது. இதனை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் விரைவில் துரிதப்படுத்தப்படும். இறுதிகட்டமாக சோதனை நாள்களுக்கு பின்னர் ஏவுதளத்துக்கு ராக்கெட் கொண்டு செல்லப்படவுள்ளது. முன்பு அனுப்பிய சந்திரயான்-2 மாதிரி இல்லாமல், 42 நாட்களில் லேண்டர் கலனை சந்திரனில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

URSC-யின் இயக்குனர் எம். சங்கரன்,"சந்திராயன்-3 ராக்கெட் ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. சந்திரயான் -3யை விண்வெளிக்கு செலுத்திய பிறகு, இந்தியாவின் முதல் மனிதர்களுடன் கூடிய விண்வெளி விமானத் திட்டமான ககன்யான் முழுமூச்சுடன் செயல்படுத்தப்படும்" எனக் கூறியுள்ளார். 

ககன்யானுக்காக போடட்டப்பட உழைப்பு, அதன் முன்னேற்றங்கள் குறித்து மக்களுக்கு இன்னும் சரி வர தெரியவில்லை என கூறிய சங்கரன், ககன்யானுக்காக நிறைய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தாண்டு மக்களுக்கு அது தெரிய வரும் என்றார். 

click me!