முதலில் நாமக்கல் மண்ணில் தரையிறங்கிய சந்தியரான்-3! இஸ்ரோவின் விக்ரம் லேண்டர் பரிசோதனை நடந்தது இப்படித்தான்?

By SG Balan  |  First Published Aug 22, 2023, 3:40 PM IST

சித்தம்பூண்டியில் இருந்து எடுக்கப்பட்ட அனார்தசைட் பாறைகள் சேலத்தில் உள்ள குவாரியில் மண்ணாக மாற்றப்பட்டு, 50 டன் அனார்தசைட் மண் இஸ்ரோவுக்கு அனுப்பப்பட்டது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 17ஆம் தேதி தனியாகப் பிரிந்தது. அதைத் தொடர்ந்து லேண்டர் நாளை (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் மென்மையாகத் தரையிறங்க உள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரும், பிரக்ஞான் ரோவரும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதை முன்கூட்டியே பரிசோதிக்க இஸ்ரோவுக்கு நிலவில் உள்ளதைப் போன்ற மண் மாதிரி தேவைப்பட்டது. அதற்காக பயன்படுத்தப்பட்டது நம் தமிழ்நாட்டு மண்தான்!

Tap to resize

Latest Videos

இந்தியாவிலேயே அந்த மண் மாதிரி தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே இருக்கிறது. 1950 களில் நாமக்கலில் உள்ள பரமத்திவேலூர் அருகே சித்தம்பூண்டி, குன்னமலை பகுதியில் அனார்தசைட் வகையைச் சேர்ந்த பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நிலவை சுத்தி சுத்தி போட்டோ எடுக்கும் சந்திரயான்-3! 70 கி.மீ தூரத்தில் எப்படி இருக்கு பாருங்க!

இந்த ஆய்வுக்கும், சந்திராயன் ஆய்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அனார்தசைட் பாறைகள் நிலவு உருவானபோதே உருவான பாறைகள். இங்கு கனிமங்கள் இருக்கும் என்ற கோணத்தில் அப்போது ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.

பின்னர், 1970 களில் அமெரிக்கா அப்போலோ விண்கலத்தை செலுத்தி ஆய்வு செய்தபோது நிலவில் அனார்தசைட் மற்றும் பேசால்ட் பாறைகள் இருப்பது தெரியவந்தது. சந்திராயன்-2 திட்டத்தின்போது இஸ்ரோ அந்த அனார்த்சைட் மண் மாதிரியை அமெரிக்காவில் இருந்து பெரிய விலை கொடுத்து வாங்கியது. இந்நிலையில் இஸ்ரோ திட்ட இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, புவியியலாளர்கள் மூலம் இந்தியாவிலேயே நிலவில் உள்ளது போன்ற மண் மாதிரியை தேடும் யோசனை முன்வைத்தார்.

இந்தப் பணி மும்பை ஐஐடியில் பணிபுரிந்து வந்த புவியியல் ஆய்வாளர் அன்பழகனிடம் சென்றது. அன்பழகன் தலைமையிலான குழுவும் இஸ்ரோவும் இணைந்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின்படி, 2004ஆம் ஆண்டு சித்தம்பூண்டி கிராமத்தில் உள்ள மண் நிலவில் உள்ள மண்ணுடன் 99 சதவீதம் ஒத்துப்போவது கண்டறியப்பட்டது.

2012-13 ஆம் ஆண்டில் சித்தம்பூண்டியில் இருந்து எடுக்கப்பட்ட அனார்தசைட் பாறைகள் சேலத்தில் உள்ள குவாரியில் மண்ணாக மாற்றப்பட்டு, 50 டன் அனார்தசைட் மண் இஸ்ரோவுக்கு அனுப்பப்பட்டது. அந்த மண்ணில் லேண்டர் மற்றும் ரோவரை பரிசோதனை செய்த பின்புதான் சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது.

சந்திரயான்-3 நிலவு தரையிறங்க சாதகமான சூழல் இல்லாவிட்டால் என்ன ஆகும்? இஸ்ரோ அதிகாரி விளக்கம்

தற்போது சந்திராயன்-3 விண்கலத்தையும் அதேபோல நிலவின் மாதிரி மண்ணில் பலமுறை சோதனை செய்து பார்த்த பின்பே விண்ணில் ஏவியுள்ளனர். இந்த மண் மாதிரியை சேகரிக்கும் பணியில் தலைமை வகித்த புவியியல் ஆய்வாளர் அன்பழகன் இப்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புவி தகவல் மைய இயக்குநராக பணியாற்றுகிறார். அவர் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் சந்திரயான்-2 சோதனைக்கு மணி மாதிரி எடுக்கும் முயற்சியைப் பற்றி விவரித்துள்ளார்.

"அனார்த்சைட் பாறைகள் பூமி தோன்றிய போதே உருவானவை. இவை எப்படி உருவானது என்பன போன்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2004ஆம் ஆண்டு சந்திராயன்-1 பணி தொடங்கியது. அப்போது,  மும்பை ஐஐடியில் இருந்து சித்தம்பூண்டியில் உள்ள அனார்த்சைட் மண் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தோம். அந்த ஆய்வில், சித்தம்பூண்டியில் இருந்து எடுக்கப்பட்ட அனார்த்சைட் பாறைகளின் பண்புகள் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள அனார்த்சைட் மண்டோடு 99 சதவீதம் ஒத்துப்போவது தெரிந்தது" என்று அன்பழகன் கூறுகிறார்.

"2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 நிலவுப் பயணத்துக்கு முந்தைய பரிசோதனைக்காக நிலவில் உள்ளதைப் போன்ற மணி மாதிர தேவைப்பட்டது. அந்த மண்ணில் லேண்டெர் மற்றும் ரோவரை சோதித்துப்ப பார்க்க இஸ்ரோ திட்டமிட்டது. அப்போது நாங்கள் ஏற்கனவே செய்த ஆராய்ச்சியின்படி, கண்டறிந்த அனார்த்சைட் பாறைகளில் இருந்து மண்ணை உருவாக்கி இஸ்ரோவுக்கு அனுப்பினோம். இஸ்ரோ அந்த மண்ணை பல ஆய்வுகளுக்கு உட்படுத்த சோதனை செய்திருக்கிறது" என்ற அன்பழகன் விளக்குகிறார்.

கடந்த முறை அனுப்பிய மண்ணையே இந்த முறை இஸ்ரோ பயன்படுத்தியிருக்கிறது என்றும் சந்திரயான்-3 பரிசோதனைக்காக மீண்டும் மண் அனுப்பப்படவில்லை என்றும் விஞ்ஞானி அன்பழகன் தெரிவிக்கிறார்.

சந்திரயான் 3 குறித்து கிண்டல் பேச்சு.. ஸ்ரீ ராம் சேனா புகார் - பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு!

click me!