தனது எதிர்ப்பாளர்களை கடுமையாக சாடிய கேசிஆர், சில அரசியல் எதிரிகள் பழைய கட்டிடத்தை இடித்து புதிய செயலகம் கட்டுவதற்கு இடையூறுகளை உருவாக்கியதாகத் தெரிவித்தார்.
தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் ஹைதராபாத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார். 28 ஏக்கரில் நிலத்தில் 10.5 லட்சம் சதுர அடியில் 265 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய அவர், “இன்றைய தினம் தெலுங்கானா வரலாற்றில் சிவப்பு எழுத்தில் குறிக்க வேண்டிய நாள்" என்றார்.
"புதிய செயலகத்தின் அற்புதமான அமைப்பு அரசு நிர்வாகத்தின் மையப்பகுதியாகும். அற்புதமான புதிய செயலகத்தை திறந்து வைத்ததை நான் பாக்கியமாகவும், அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பியின் லட்சியங்களை உணர்ந்து செயல்பட மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கட்டிடத்துக்கு பி.ஆர்.அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது" என முதல்வர் கே.சி.ஆர். குறிப்பிட்டார்.
655 அறைகள்! 28 ஏக்கர்! புதிய தெலுங்கானா தலைமை செயலகத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் கே.சி.ஆர்.!!
எதிர்க்கட்சியினரைக் கடுமையாகச் சாடிய கேசிஆர், "சில அரசியல் எதிரிகள் பழைய கட்டிடத்தை இடித்து புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு இடையூறுகளை உருவாக்கினர்" எனக் குற்றம்சாட்டினார். தெலுங்கானாவை புனரமைப்பது என்பது ஒருங்கிணைந்த ஆந்திராவில் கவனிக்கப்படாமல் வறண்டுபோன மாநிலத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் புத்துயிர் அளிப்பதற்கு உத்வேகம் அளிப்பதாகும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
திறப்பு விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் அதிகாலை 6 மணி முதல் 'சுதர்சன யாகம்' நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சடங்குகள் மதியம் 1.30 மணியளவில் முடிந்ததும், முதல்வர் சந்திரசேகர ராவ் புதிய தலைமைச் செயலகத்தின் ஆறாவது மாடியில் உள்ள தனது அறையில் அலுவல்களைத் தொடங்கினார். மாநில அமைச்சர்களும் அந்தந்த அறைகளுக்குச் சென்று பணிகளை ஆரம்பித்தனர்.
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் கட்டப்பட்ட முந்தைய தலைமைச் செயலக வளாகத்தின் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஆலோசனைகளை வழங்கியது. ஜூன் 27, 2019 அன்று தலைமைச் செயலகம் கட்டுவதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். கோவிட் -19 தொற்று காரணமாகவும், நீதிமன்ற வழக்குகள் மற்றும் பிற சிக்கல்களாலும் கட்டுமானப் பணிகள் தாமதமாயின. 2021 ஜனவரியில் பணிகள் தொடங்கப்பட்டன.
என் சகோதரரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்! பிரதமருக்கு பிரியங்கா காந்தி அட்வைஸ்
"பழைய செயலகத்தில் 70 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் இருந்தன. சில பகுதிகள் 40 ஆண்டுகள் பழமையானவை. இன்னும் சில, 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. பழையதாகவும், ஒழுங்கமைக்கப்படாததாகவும் இருந்தன. அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் வெவ்வேறு தொகுதிகளில் அமரவேண்டிய நிலை இருந்தது" என தெலுங்கானா சட்டமன்ற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் வெமுலா பிரசாந்த் ரெட்டி கூறுகிறார்.
விசாலமாக அமைந்துள்ள புதிய தலைமைச் செயலகத்தின் குவிமாடங்கள் நிஜாமாபாத்தில் உள்ள காகத்தியர் காலத்து நீலகண்டேஸ்வர ஸ்வாமி கோவில் பாணியிலும், தெலுங்கானாவில் உள்ள வனபர்த்தி 'சம்ஸ்தானத்தின்' அரச குடும்பங்களின் அரண்மனைகளின் வடிவமைப்புகளிலும், குஜராத்தின் சரங்பூரில் உள்ள ஹனுமான் கோவிலின் வடிவத்திலும் கட்டப்பட்டுள்ளன.
காங்கிரஸ் முகமே இல்லாத கட்சி... வாக்குறுதிகளுக்கு உத்தரவாதம் கிடையாது! அமித் ஷா விமர்சனம்