தேசிய தேர்வு முகமையை சீரமைக்க இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், ஐஐடி கான்பூர் ஆட்சிமன்ற குழுத் தலைவருமான டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட குழுவை மத்திய கல்வித்துறை அமைத்துள்ளது.
தேசிய தேர்வு முகமையை ஆய்வு செய்து தேர்வுகளை வெளிப்படையாகவும் சுமூகமாகவும் நடத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வல்லுநர் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்திய இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு புகார் எழுந்துள்ளன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் குறித்த சர்ச்சைகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதனால், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை என்.டி.ஏ. ரத்துசெய்தது.
undefined
இந்த விவகாரம் பூதாகரமாகிவிட்டதால், மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. யூஜிசி நெட் தேர்வும் முறைகேடுகள் குறித்த சந்தேகம் காரணமாக தேர்வு முடிந்த மறுநாளே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்த 42,000 இஸ்ரேல் பெண்கள்! 10,000 பேருக்கு பயிற்சி!
இச்சூழலில் தேசிய தேர்வு முகமையை சீரமைக்க இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், ஐஐடி கான்பூர் ஆட்சிமன்ற குழுத் தலைவருமான டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட குழுவை மத்திய கல்வித்துறை அமைத்துள்ளது. இந்தக் குழு தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளை வெளிப்படையாக, சுமூகமாக நடத்த பரிந்துரைகளை வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தக் குழு 2 மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும். தேர்வு நடத்தும் செயல்முறையில் சீர்திருத்தம், மேம்பட்ட தரவு பாதுகாப்பு நெறிமுறைகள், தேசிய பாதுகாப்பு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த பரிந்துரைகளைக் கொடுக்கும்" எனக் கூறியுள்ளார்.