நெல்லுக்கான கொள்முதல் விலை 5.35% அல்லது ரூ.117 அதிகரித்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, 2013-14ஆம் ஆண்டில் ரூ.1,310 ஆக இருந்தது என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகள் காரிப் பருவ சாகுபடியைச் தொடங்குவதற்கு முன், 14 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைந்தபட்சம் 50% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.117 உயர்த்தப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதற்காக விவசாயிகள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாகவே இந்த கொள்முதல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கமுக்கமா இந்தியாவை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்கள்! எல்லாரும் போற நாடு எதுன்னு தெரியுமா?
"இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும் விவசாயிகளின் நலனுக்காக மிக முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காரிப் பருவ சாகுபடி தொடங்குவதற்கு முன், 14 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
"2018 மத்திய பட்ஜெட்டில், கொள்முதல் விலை உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று தெளிவான கொள்கை முடிவை எடுக்கப்பட்டது. இன்று அதற்கு ஏற்ப கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களில் விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது" எனவும் அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நெல்லுக்கான கொள்முதல் விலை 5.35% அல்லது ரூ.117 அதிகரித்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, 2013-14ஆம் ஆண்டில் ரூ.1,310 ஆக இருந்தது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பருத்தியின் கொள்முதல் விலை சாதாரண ரகத்திற்கு ரூ.7,121 ஆகவும், மற்றொரு ரகத்திற்கு ரூ.7,521 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய விலையைவிட ரூ.510 அதிகமாகும்.
ஜவ்வரிசிக்கு ரூ.3,371, ராகிக்கு ரூ. 4,290, சோளத்துக்கு ரூ.2,225 கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருப்பு வகைகளில், பாசிப்பருப்புக்கு ரூ.8,682, துவரம் பருப்புக்கு ரூ.7,550 குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூரியகாந்தி, நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்களுக்கும் கொள்முதல் விலை அதிகரித்துள்ளது.