கடந்த ஆண்டு 5,100 இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஹென்லி & பார்ட்னர்ஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 4,300 கோடீஸ்வரர்கள் இந்த ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு 5,100 இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் இதே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
undefined
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்ட நாடான இந்தியா, கோடீஸ்வரர்களின் புலம்பெயர்வு அடிப்படையில் உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் அறிக்கை கணிக்கிறது. சீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்த வரிசையில் முதல் இரு இடங்களில் இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
50 ஆண்டுகளாக 30 கிராமங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் வற்றாத அதிசயக் கிணறு!
இந்தியா இப்போது சீனாவை முந்தி, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உள்ளது. இந்தியாவில் இருந்து கோடீஸ்வரர்கள் புலம்பெயர்வது சீனாவைவிட 30% சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
"ஒவ்வொரு ஆண்டும் இந்தியா ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்களை இழக்கும் அதே வேளையில், பலர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குடிபெயர்ந்து வருகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் சவுதி அரேபியா தொடர்ந்து உயர் வகுப்பினர் விரும்பும் நாடாக இருந்துவருகிறது. அங்கிருந்து வெளியேறும் கோடீஸ்வரர்களை விட அதிகமாக புதிய கோடீஸ்வரர்களை அந்நாடு உருவாக்குகிறது" என்று ஹென்லி & பார்ட்னர்ஸ் அறிக்கை கூறுகிறது.
வெளியேறும் கோடீஸ்வரர்களில் பலர் இந்தியாவில் கிடைக்கும் வணிக பலன்கள் மற்றும் வீடுகளைத் தக்கவைத்துக்கொள்வதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது இந்தியாவுடன் கொண்டிருக்கும் பொருளாதார உறவுகளைப் பிரதிபலிக்கிறது என்றும் அறிக்கை விளக்குகிறது.
தேமுதிக அலுவலகத்திற்கு நாகப்பாம்பு ரூபத்தில் வந்தாரா விஜயகாந்த்? தொண்டர்கள் நெகிழ்ச்சி!