ராஜீவ் கொலை கைதி விடுதலையில் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது; நிர்மலா சீதாராமன்

 
Published : Jun 24, 2017, 08:56 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
ராஜீவ் கொலை கைதி விடுதலையில் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது; நிர்மலா சீதாராமன்

சுருக்கம்

Central government will be decided after discussion on Rajiv Gandhi Assassination Case says minister Nirmala Sitharaman

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதி விடுதலை பற்றி மத்திய அரசு தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.
 

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படுவது உறுதி. எந்த இடத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்படவேண்டும் என்பது பற்றி தமிழக அரசு கோர்ட்டில் தாக்கல் செய்து இருக்கும் தகவல் தொடர்பாக நான் பதில் அளிக்க முடியாது. 

எய்ம்ஸ் மருத்துவமனையை செங்கல்பட்டில் தான் அமைக்கவேண்டும் என ஒரு தரப்பினரும், மதுரையில் தான் அமைக்கவேண்டும் என இன்னொரு தரப்பினரும் கேட்டு அதற்கான அழுத்தத்தை கொடுக்கிறார்கள். இதுபோன்ற பல காரணங்களால் தாமதம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் எந்த இடத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்படவேண்டும் என்பதை தமிழக அரசு, இதற்காக அமைக்கப்பட்ட தொழில் நுட்ப குழு ஆகியவற்றுடன் கலந்து பேசி மத்திய அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்த ராபர்ட் பயாஸ் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் விடுதலை செய்யாமல் சிறையில் அடைத்து வைத்து இருப்பதால் தன்னை கருணை கொலை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிடம் மனு கொடுத்து இருப்பதாகவும், தமிழக சட்டசபையில் இதுபற்றி விவாதம் நடத்தப்பட்டதாகவும், இதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி கேட்கப்படுகிறது.

ராபர்ட் பயாஸ், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி. அவரது கருணை மனு ஜனாதிபதியால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்கிறார். மேலும், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிககளை விடுவிப்பது மனித உரிமை தொடர்புடையது. தனிப்பட்ட முறையில் எங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதுகுறித்து ஆலோசனைக்குப் பின்னரே சொல்ல முடியும் என்றார்.

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
ஒரே ஃபிரேம்ல ரெண்டு GOAT.. சச்சின் கையால் 'நம்பர் 10' ஜெர்சி வாங்கிய மெஸ்ஸி!