ஹரித்வாரில் பலத்த வெள்ளத்தில் தகன மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மற்றும் கார்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் கொத்துக் கொத்தாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ஹர் கி பவுரியில் கனமழை காரணமாக கங்கை ஆற்றில் வெள்ளப்ப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ள நீர் கரையைக் கடந்து பாய்கிறது. இந்நிலையில், வெள்ளத்தில் பல கார்கள் மற்றும் பேருந்துகள் மூழ்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.
பலத்த நீரோட்டத்தில் தகன மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மற்றும் கார்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
हरिद्वार में जल प्रलय जैसा नज़ारा
सुखी नदी में दर्जनों वाहन बह गए, हालात बेक़ाबू।लोगों को सुरक्षित स्थानों पर ले जया गया। pic.twitter.com/8YWgMcraM8
ஒரு வீடியோவில் காவல்துறையினர் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுப்பதையும் பார்க்க முடிகிறது. கனமழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்துள்ளது. அனைவரும் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்டில் பருவமழை காலத்தில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ள நீர் கரையக் கடந்து ஊருக்குள் புகுவது வருடம்தோறும் நடக்கும் வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி மொபைல் நெட்வொர்க்கை மாற்றுவது அவ்ளோ ஈசி இல்ல... ஆன்லைன் மோசடிக்கு செக் வைக்கும் டிராய்!