1834 முதல்1920 வரையான காலத்தில் சர்க்கரை உற்பத்தியில் வேலை செய்வதற்காக, சுமார் 4,70,000 இந்தியர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மொரிஷியஸுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இன்று மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை நடத்துகிறார்கள். இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் அரசில் முக்கியமான உயர் பதவிகளில் இருக்கிறார். சில பிராந்தியங்களில் மக்கள்தொகை அடிப்படையிலும் செல்வாக்கானவர்களாக உள்ளார்கள்.
ஆனால், இந்தியர்கள் முதல் முறையாக புலம்பெயர்ந்து சென்றபோது, இதுபோன்ற வெற்றிகரமான நிலை அவர்களால் அடைய முடியவில்லை. முதலில் அவர்கள் உலகெங்கிலும் உள்ள பிரிட்டிஷ் மற்றும் டச்சு காலனிகளில் அடிமைகளுக்கு மாற்றாகத்தான் வரவழைக்கப்பட்டனர்.
undefined
அலோக் சின்ஹா தனது ஆராய்ச்சியில் “இந்தியாவிலிருந்து மொரிஷியஸ் சென்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள்” என்ற தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறார். வற்புறுத்தி அழைத்துவரப்பட்ட மக்கள் அங்கு கொத்தடிமைகளாக மாறியது எப்படி, அதன் காரணங்கள் முதலிவற்றை தனது ஆய்வில் விவரித்துள்ளார்.
சின்ஹாவின் ஆய்வேடு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுப் பள்ளியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. "1834 மற்றும் 1920 க்கு இடையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து பல்வேறு பிரிட்டிஷ் மற்றும் டச்சு காலனிகளுக்கு கட்டாய இடம்பெயர்வு மேற்கொண்டனர். இது காலனித்துவ வரலாற்றில் கவனிக்கப்படாத குறிப்பிடத்தக்க அத்தியாயமாகும்" என சின்ஹா கூறுகிறார்.
சின்ஹாவின் ஆய்வு இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவான மொரிஷியஸுக்கு இடம்பெயர்ந்த இந்தியர்களை மையமாகக் கொண்டுள்ளது. மொரீஷியஸ் முதலில் 17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் ஆட்சி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்கள் ஆக்கிரமித்தார்கள். இறுதியில் 1810 இல் பிரிட்டிஷ் காலனியாக மாறியது.
மொரீஷியஸ் தீவின் பொருளாதாரம் பெரும்பாலும் சர்க்கரை உற்பத்தியை சார்ந்திருந்ததாக இருந்தது. ஆப்பிரிக்காவின் அடிமைத் தொழில் முறையில் சர்க்கரை உற்பத்திக்கு ஆட்களை விலை கொடுத்து வாங்கினர். 1833இல் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதை அடுத்து, மொரிஷியஸ் சர்க்கரைத் தொழில் கடுமையான தொழிலாளர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது.
அடிமைகளாக இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டதும் கடுமையான சூழலில் குறைவான சம்பளத்தில் தொடர்ந்து வேலை பார்க்க விரும்பவில்லை. இதனால் அவர்கள் தோட்ட வேலைகளில் இருந்து விலகினர். இந்தச் சூழலில் 1834 முதல்1920 வரையான காலத்தில் சர்க்கரை உற்பத்தியில் வேலை செய்வதற்காக, சுமார் 4,70,000 இந்தியர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மொரிஷியஸுக்கு அனுப்பப்பட்டனர்.
இது மொரீஷியஸில் சர்க்கரைத் தோட்டங்களுக்கு பொருளாதார ரீதியாக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது. மொரீஷியஸ் பெரிய சர்க்கரை உற்பத்தியாளராக மாற்றியது.
சிக்கிம் வெள்ளம்: 70 அடி பாலத்தை 3 நாளில் கட்டி முடித்த ராணுவப் பொறியாளர்கள்!