முதல்வரின் ஜெகன்மோகனின் தாயார் சென்ற காரின் 2 டயர்களும் ஒரே நேரத்தில் வெடித்ததால் பரபரப்பு..!

Published : Aug 12, 2022, 10:27 AM ISTUpdated : Aug 12, 2022, 10:37 AM IST
முதல்வரின் ஜெகன்மோகனின் தாயார் சென்ற காரின் 2 டயர்களும் ஒரே நேரத்தில் வெடித்ததால் பரபரப்பு..!

சுருக்கம்

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தாயார் பயணம் செய்த காரின் இரண்டு டயர்களும் ஒரே நேரத்தில் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தாயார் பயணம் செய்த காரின் இரண்டு டயர்களும் ஒரே நேரத்தில் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்து வருகிறார். இவரது தாயார் விஜயம்மா. இவர் தனது கணவர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் நண்பரான அய்பாபுரெட்டியின் குடும்பத்தைப் பார்க்க விஜயம்மா கர்னூலுக்கு வந்தார். அங்கிருந்து மீண்டும் ஐதராபாத் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென காரின் 2 டயர்கள் ஒரே சமயத்தில் வெடித்தன.

இதையும் படிங்க;- raksha bandhan 2022 : ராகுல் காந்தி புகைப்படத்தை பதிவிட்டு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி

இதனையடுத்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், டிரைவர் சாமர்த்தியமாக காரை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் முதல்வர் ஜெகன் மோன் ரெட்டியின் தயார் விஜயம்மா எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து, விஜயம்மா வேறொரு காரில் ஐதராபாத் சென்றார்.

சமீபத்தில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் விஷ்ணுவர்தன் ரெட்டியின் மகன் சென்ற காரின் இரண்டு டயர்கள் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- சபரிமலை பிரசாதம் - பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்..கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
காரில் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்! ஆக்ரா போலீஸ் அட்டூழியம்!