supermoon:2022ம் ஆண்டின் கடைசி ‘சூப்பர் மூன்’ இன்று வானில் தெரியும்: பெயர் என்ன? தமிழகத்தில் பார்க்க முடியுமா?

By Pothy Raj  |  First Published Aug 12, 2022, 9:46 AM IST

2022 ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன் இன்று வானில் தெரியும். இந்த சூப்பர் மூன் நிகழ்வு இன்று(12ம்தேதி) வானில் தோன்றும். வழக்கமான தோற்றத்தைவிட இன்று நிலவு வானில் மிகப்பெரியதாகவும், ஒளிமிகுந்ததாகவும் இருக்கும்.


2022 ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன் இன்று வானில் தெரியும். இந்த சூப்பர் மூன் நிகழ்வு இன்று(12ம்தேதி) வானில் தோன்றும். வழக்கமான தோற்றத்தைவிட இன்று நிலவு வானில் மிகப்பெரியதாகவும், ஒளிமிகுந்ததாகவும் இருக்கும்.

பூமிக்கு மிக அருகே ஆண்டுக்கு 3 அல்லது 4முறை நிலவு வரும்போது, சூப்பர் நிலவு தோன்றும். பூமி கோளுக்கு அருகே நிலவு வரும்போது, வழக்கத்தைவிட 17 சதவீதம் அளவில் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும்.

Tap to resize

Latest Videos

இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியல்… 3ம் இடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சூப்பர் மூன் பெயர் என்ன

இன்று வானில் தோன்றும் சூப்பர் மூன் பெயர் ஸ்ட்ரூஜென் மூன்(Sturgeon Moon) என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது கடலில் ஸ்ட்ரூஜென் என்ற மீன் மிகப்பெரியதாக இருக்கும். இந்த மீனை இரவு நேரத்தில்தான் பிடிக்க முடியும். வடக்கு அமெரிக்காவில் உள்ள அல்கான்குயின் பழங்குடி மக்கள் இந்த பவுர்ணமி நாளில் எளிதாக ஸ்ட்ரூஜென் மீனை பிடித்துவிடுவார்கள். ஆதலால், இந்த சூப்பர் மூனுக்கு ஸ்ட்ரூஜென் மூன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி புகைப்படத்தை பதிவிட்டு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி

கடந்த ஜூன் மாதம் ஸ்ட்ராபெர்ரி மூன் வானில் தோன்றியது, ஜூலை மாதம் பக் மூன் தோன்றியது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன், ஸ்ட்ரூஜென் மூன் வானில் தோன்றுகிறது.

இந்த சூப்பர் மூன் 11ம் தேதி நள்ளிரவிலிருந்து 12, 13ம் தேதி வரை வானில் அனைவரும் காணலாம். 
அது மட்டுமல்லாமல் சனிக்கிரகத்தையும் இந்த முறை காணமுடியும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த கிரகம் பூமிக்கு அருகே சூப்பர் மூன் தோன்றபின் அருகே வரும் அப்போது சனிக்கிரகத்தை காணமுடியும் என நாசா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் உண்மையில் நேற்று இரவு 9.40மணிக்கு தோன்றுவிட்டது. ஆனால், இந்தியாவில் தெரியவில்லை. ஆனால், இன்று(12ம்தேதி) சூப்பர் மூன் முழுமையாக வழக்கத்தைவிட பெரிதாகவும், அதிக பிரகாசமாகவும் தோன்றும் இதை இந்தியா முழுவதும் காணலாம். 

சூப்பர்மூன் என்றால் என்ன

சூப்பர் மூன் என்பது, நிலவு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமாக வரும்போது சூப்பர் மூன் தோன்றும். அப்போது, வழக்கத்தை விட நிலவு அளவில் பெரிதாகவும், ஒளி அதிகமாகவும் இருக்கும். சூப்பர் மூன் என்பது அதிகாரபூர்வப் பெயர் இல்லை. இன்று வரும் சூப்பர்மூன், பூமியிலிருந்து 3 லட்சத்து 57ஆயிரத்து 264 கி.மீ தொலைவில் தெரியும்.

பிரதமர் பதவிக்கான தரத்தைக் குறைக்காதீர்கள்: பிரதமர் மோடியை விளாசிய ராகுல் காந்தி

சூப்பர் மூன் ஆண்டுக்கு 3 அல்லது 4 முறைவரை தோன்றலாம். சூப்பர் மூன் வழக்கத்தைவிட 17 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும்இருக்கும். சூப்பர்மூன் மற்ற நாட்களில் வரும் நிலவைவிட சற்றுதான் பெரிதாக இருக்கும், ஆனால் ஒளி அளவில் அதிகான ஒளிவீச்சை வழங்கும். இந்த சூப்பர் மூன் வரும் காலத்தில் கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பு, கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.

அடுத்த சூப்பர் மூன் எப்போது?
2023 ஜூலை 3ம் தேதி சூப்பர் மூன் வரும். இந்த ஆண்டைப் போல் அடுத்த ஆண்டும் 4 சூப்பர் மூன் நிகழும்.

 
 

click me!