ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் - மதுரை வீரர் உட்பட 3 பேர் மரணம்!

By Dinesh TG  |  First Published Aug 11, 2022, 3:30 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி அருகே ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் உயிரிழந்தனர். எதிர்த்து போரிட்ட ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அதில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

Tap to resize

Latest Videos

தேசத்தின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் எல்லையில் பயங்கரவாத தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!